சென்னை+7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. கொட்டி தீர்க்கும் கனழை! உட்சபட்ச எச்சரிக்கை
சென்னை: வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றிருக்கிறது. புயல் இன்று இரவு கரையை கடக்க இருப்பதால், சென்னை உட்பட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. மதியம் 1 மணி வரை 8 மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்க்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வங்கக்கடலில் புயல் உருவாவதும், அது வட தமிழக மாவட்டங்களை பாதிப்பதும் வழக்கமானதாக மாறியிருக்கிறது. அந்த வகையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் அந்தமான் நிகோபர் பகுதியில் உருவாகியிருந்த வளிமண்டல சுழற்சியானது மெல்ல நகர்ந்து தமிழகத்தை நெருங்கியது. வரும் வழியில் இது புயலாக வலுப்பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக சென்னை உட்பட வடதமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதாவது இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழை பெய்யும் என்றும்,
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாளை தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
டிச.2ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இன்று மதியம் 1 மணி வரை சென்னை உட்பட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
ரெட் அலர்ட் மாவட்டங்கள்:
சென்னை
செங்கல்பட்டு
திருவள்ளூர்
ராணிப்பேட்டை
காஞ்சிபுரம்
வேலூர்
திருவண்ணாமலை
விழுப்புரம்
புதுச்சேரி
ஆரஞ்சு அலர்ட் மாவட்டங்கள்:
கள்ளக்குறிச்சி
திருச்சி
அரியலூர்
பெரம்பலூர்
கடலூர்
மயிலாடுதுறை
நாகை
திருவாரூர்
தஞ்சை
புதுக்கோட்டை
மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள்:
திருப்பத்தூர்
கிருஷ்ணகிரி
தருமபுரி
சேலம்
கரூர்
நாமக்கல்
திண்டுக்கல்
மதுரை
சிவகங்கை
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.
ரெட் அலர்ட் விளக்கம்: மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications