பெஞ்சல் புயல் கரையை கடந்தபிறகும் சிக்கல் இருக்கு.. நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! இங்கே கவனிங்க
சென்னை: நாளையும் (டிசம்பர் 1) தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் நாளை மிக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த பிறகு சென்னையில் நாளை மழை குறைந்தாலும், இந்த மாவட்டங்களுக்கு அதிகனமழை காத்திருக்கிறது.
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ஃபெஞ்சல் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு 110 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதேபோல் புதுச்சேரிக்கு 120 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று கரையை கடக்க வாய்ப்பு இல்லை எனவும், நாளை தான் கரையை கடக்கும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அடுத்த மேகக்கூட்டம் உருவாகி வருவதாகவும், இதனால் சென்னையில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று மாலை 4 மணி வரை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் ஆகிய 8 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக தற்போதும் மழை வெளுத்து வரும் நிலையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாளையும் (டிசம்பர் 1) தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் நாளை மிக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 1) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
மேலும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, திருச்சி, நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications