மிக கனமழை எச்சரிக்கை.. மயிலாடுதுறையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு!
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்றிருக்கிறது. இதனால் இன்று டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது சில நேரங்களில் புயலாக வலுப்பெற்று தமிழகத்திற்கு நல்ல மழைப்பொழிவை கொடுத்துவிடுகிறது. சில நேரங்களில் இந்த மழை வெள்ள பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரும் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் வட கடலோர மாவட்டங்களுக்கு அதிக மழைப்பொழிவை கொடுத்தது. இதனால் விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது புதியதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. கடந்த டிச.9ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றிருக்கிறது. இது தமிழகத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நேற்று நள்ளிரவு தொடங்கி தற்போது வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.
எனவே இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications