கொளுத்தும் வெயிலுக்கு குட்டி பிரேக்! இன்று தமிழகத்தில் மழை இருக்கு.. எங்கு தெரியுமா! வெதர்மேன் நறுக்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே வறண்ட ஒரு வானிலையே நிலவி வந்த நிலையில், இன்று மாநிலத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடந்த முறை பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்தது. சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கும் சரி, தென் மாவட்டங்களுக்கும் சரி இந்த முறை பருவமழை காலத்தில் நல்ல மழை பெய்தது.

ஆனால், பருவமழை முடிந்த பிறகு மாநிலத்தில் வெப்பம் அதிகரித்தது. பொதுவாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் தான் தமிழ்நாட்டில் வெப்பம் உச்சத்தைத் தொடரும். ஆனால், இந்தாண்டு பிப். மாதமே வெப்பம் அதிகரித்துவிட்டது.
வெப்பம்: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் வெப்பம் சதமடித்துவிட்டது. குறிப்பாக ஈரோடு, கரூர் பரமத்தி ஆகிய பகுதிகளில் வெப்பம் அதிகமாகவே இருக்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதித்துள்ளனர். கடந்த சில காலமாகவே வெப்பம் தொடர்ந்து அதிகமாக இருக்கும் நிலையில், எப்போ தான் மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர். கொஞ்சம் கோடை மழை பெய்தால் கூட வெப்பம் குறையும் என்பதே மக்கள் நினைப்பு.

இன்று வானிலை: இதற்கிடையே தமிழ்நாட்டில் இன்று வானிலை எப்படி இருக்கும்.. எங்கு மழை பெய்யும் என்பது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "தமிழகம் மற்றும் டெல்டாவின் உள்பகுதிகளில் இன்று சிறியளவில் மழை பெய்யும். பெங்களூரிலும் கூட ஆங்காங்கே ஆச்சரியப்படுத்தும் வகையில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்" என்று பதிவிட்டுள்ளார்.
அவர் சொன்னது போலவே மாநிலத்தில் தென்தமிழக பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. முன்னதாக வானிலை மையமும் கூட இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கெட் ரெடி.. படபடன்னு அடுத்த 3 மணி நேரம் மழை கொட்டப்போகுது! 9 மாவட்டங்களுக்கு பறந்த வானிலை அலர்ட்
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்: இது ஒரு பக்கம் இருக்க இப்போது இந்தியா இங்கிலாந்து மோதும் 4ஆவது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்து வருகிறது. இந்தியா டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கும் நிலையில், இந்த போட்டி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இரண்டாவது நாளான இன்று இப்போது இங்கிலாந்து 7 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது. இதற்கிடையே இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்: இது தொடர்பாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மேல் நிலை ஜெட்ஸ்ட்ரீமை நனைப்பது, குறிப்பாக அது திரும்பும் பகுதிகளில் பல உறுதியற்ற தன்மையை உருவாக்க வேண்டும்.
இதனால் இன்றுடன் சேர்த்து அடுத்த 4 நாட்களில் ராஞ்சியில் மழை பெய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பெரும்பாலும் இது குறுகிய நேர மழையாகவே இருக்கும். இந்த மழை ஸ்விங் செய்வது மற்றும் ஆடுகளத்தின் தன்மையை எப்படிப் பாதிக்கிறது என்பதைப் பார்ப்போம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications