லேசான மழை + அதிக குளிர்.. தமிழகத்தில் அடுத்த 2 நாள் வெளியே போகவே முடியாது! வானிலை மையம் மேஜர் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மாநிலத்தின் தென் மாவட்டங்களில் ஓரளவுக்கு மழை பெய்துள்ளது. அதேநேரம் பெரும்பாலான இடங்களில் குளிர் அதிகமாகவே இருக்கிறது. இதற்கிடையே வரும் நாட்களில் தமிழகத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்து எச்சரித்துள்ள வானிலை மையம், எங்கெல்லாம் மழை இருக்கும், எங்குக் குளிர் அதிகமாக இருக்கும் என்பது தொடர்பாக சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

மழை எங்கே:
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊத்து (திருநெல்வேலி), நாதூமுக்கு இருநெல்வேலி) தலா 60 மிமீ மழை பெய்துள்ளது. மேலும், காக்காச்சி (திருநெல்வேலி) 5, மாஞ்சோலை (திருநெல்வேலி] 40 மிமீ மழையும், தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), பாம்பன் (ராமநாதபுரம்), மண்டபம் (ராமநாதபுரம்) தலா 20 மிமீ மழையும் பெய்துள்ளது. இது தவிர கோவில்பட்டி (தூத்துக்குடி), பெரியாறு அணை (விருதுநகர்), ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி), சூரங்குடி (தூத்துக்குடி), கடலாடி (ராமநாதபுரம்) தலா 10 மிமீ மழை பெய்துள்ளது.
வரும் நாட்களில் கிளைமேட்:
வரும் நாட்களில் கிளைமேட் எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (ஜனவரி 23) தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
ஜனவரி 24ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். ஜனவரி 25 முதல் 27 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஜனவரி 28, 29 தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23' செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23' செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications