வேலூரில் கொளுத்திய வெயில்! 9 மாவட்டங்களில் சதம்.. மக்களே உஷார்!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று 9 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரான்ஹீட்டை கடந்திருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வெயில் அதிகமாக இருப்பதால் மக்கள் உடல் நலத்தை கவனமாக பராமரிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இன்று மாலை வெளியான அறிவிப்பின்படி,
1. கோவை: 100.04°F
2. தருமபுரி: 100.4°F
3. ஈரோடு: 102.56°F
4. கரூர் பரமத்தி: 102.74°F
5. மதுரை: 101.84°F
6. சேலம்: 103.28°F
7. தஞ்சாவூர்: 101.3°F
8. திருச்சி: 101.48°F
9. வேலூர்: 105.62°F
என வெயில் பதிவாகியிருக்கிறது. குறைந்தபட்சமாக ஊட்டியில் 54.32 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியிருக்கிறது. முன்னதாக வெளியான வானிலை அறிவிப்பில்,
"தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே, 27-03-2025 மற்றும் 28-03-2025: மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
29-03-2025 முதல் 31-03-2025 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 01-04-2025 மற்றும் 02-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு காரணமாக 27-03-2025 மற்றும் 28-03-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 29-03-2025 முதல் 31-03-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2
செல்சியஸ் உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்த அளவில், 27-03-2025 மற்றும் 28-03-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். 29-03-2025 முதல் 31-03-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில்
இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
இன்று (27-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (28-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications