இனிதான் உச்சம்.. வங்கக்கடல் தாழ்வு மையம் இப்போது எங்கே இருக்கிறது? சென்னையிலிருந்து தூரம் என்ன?
சென்னை: வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி உள்ள இந்த தாழ்வு பகுதி மிக கனமழையை கொடுக்க போகிறது. இந்த தாழ்வு பகுதி சென்னையில் இருந்து வடகிழக்கே வங்கக்கடல் பகுதியில் சுமார் 310 கிமீ தூரத்தில் நிலவி வருகிறது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இரு தினங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதையடுத்து நவ.26 முதல் நவ.29ம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.

இந்த தாழ்வு மையம் காரணமாக அடுத்த 1 வாரத்திற்கு மிக கனமழை பெய்ய போகிறது. அதன்படி வடகிழக்கு பருவமழையின் உச்சம் அடுத்த வாரம் அடையும் வாய்ப்புகள் உள்ளன. சென்னை + டெல்டா மாவட்டங்கள் இரண்டிலும் அடுத்த வாரம் கனமழை பெய்யலாம். முக்கியமாக கடந்த 10 நாட்களாக சென்னையில் பெய்யாத மழைக்கு எல்லாம் சேர்த்து வைத்து அடுத்த வாரம் பெய்யலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கனமழை பெய்யும். நகரின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தெற்கு கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்:
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2322 மில்லியன் கன அடியாக உள்ளது.
1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 114 மில்லியன் கன அடியாக உள்ளது.
500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 302 மில்லியன் கன அடியாக உள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 45.45% நீரிருப்பு உள்ளது. மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 5.344 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.
செம்பரம்பாக்கம் - 58.52%
புழல் - 70.36%
பூண்டி - 14.64%
சோழவரம் - 10.54%
கண்ணன்கோட்டை - 60.4%












Click it and Unblock the Notifications