வானிலையில் இதுமட்டும் நடந்தால்.. வேறலெவல் சம்பவம்! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன 2 சான்ஸ்.. முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று வானிலை எப்படி இருக்கும்? காற்றழுத்த தாழ்வு பகுதியால் என்ன நடக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்ட கணிப்பில், டெல்டா பெல்ட்டில் இன்று 25ம் தேதி முதல் கனமழை பெய்ய போகிறது. அதேபோல் 26 மற்றும் 27ம் தேதிகளில் பெய்ய போகும் மிக கனமழையின் போது கவனமாக இருக்க வேண்டும்.

tamilnadu weatherman summer weather news

நாகை, திருவாரூர், காரைக்கால், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்யும். 26 ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கவனமாக இருக்க வேண்டும்.

டெல்டா மாவட்டங்களுக்கு விரைவில் IMD மூலம் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் ரெட் அலர்ட் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களுக்கு என்ன நடக்கும் என்று விரைவில் சொல்கிறேன். இன்று பெரிதாக மழை இருக்காது.

இந்த தாழ்வு மையம்.. தாழ்வு மண்டலமாக மாறும்.. தமிழ்நாடு கடற்பகுதிகளில் கரையை கடக்கும் என்று ECMWF சொல்கிறது. அதே சமயம் இலங்கை அருகே உள்ள இந்திய வானிலை மைய தகவல்கள்.. இது பர்மா நோக்கி செல்லும்.. புயலாக உருவெடுக்கும் என்று கணித்துள்ளன.

வலிமையான சிஸ்டமாக இது மாறினால் - நமக்கு மழை இல்லை
வலிமை இல்லாத சிஸ்டமாக மாறினால் - நமக்கு வேறலெவல் மழை

எனவே காத்திருங்கள்!!!! என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறி உள்ளார்.

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தெற்கு கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

25.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

26.11.2024: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

27.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மற்றும் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

28.11.2024: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தென்காசி, தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

29.11.2024: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால்
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மற்றும் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+