பேருதான் வடகிழக்கு பருவமழை! ஆனால் தென் மாவட்டங்களில்தான் சம்பவம் இருக்கு! வெதர்மேன் வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்மேற்கு பருவமழை விலகி, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கிறது. பெயர் வடகிழக்கு பருவமழை இருந்தாலும், இன்று தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது x பக்கத்தில், "ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் இன்று சிறப்பான நாள்களில் ஒன்றாக இருக்கப் போகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், கரூர், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, விருதுநகர், தர்மபுரி, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை போன்ற மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு அருகில் உள்ள மாவட்டங்களிலும், கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு அருகில் உள்ள வட மாவட்டங்களிலும் மழை பரவலாக பெய்யும்" என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து இருக்கிறார்.

Tamil Nadu Weatherman

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இன்று முதல் தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகி.. வடகிழக்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டின் உட்புற மாவட்டங்களில் வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், இந்த மழை வெப்பத்தை தணித்து மக்களுக்கு சற்று ஆறுதல் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்றில் ஏற்பட்டுள்ள கிழக்கு திசை காற்றின் காரணமாக.. மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்ய தொடங்கி இருக்கிறது.

வடகிழக்கு பருவமழையாக இருந்தாலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தென் மாவட்டங்களிலும், பரவலாக மழை பெய்யும் என்று ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

வழக்கமாக வடகிழக்கு பருவமழை.. சென்னை, டெல்டா போன்ற மாவட்டங்களில் தான் பலத்த மழையை தரும். ஆனால், இந்த பருவ மழையின் தொடக்க நாளில் நிலவும் சாதகமான காற்று குவிதல் மற்றும் குமரி கடல் பகுதி வளிமண்டல சுழற்சி காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தவிர உள் மற்றும் கொங்கு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு படி இந்த மழையின் தீவிரம் அக்டோபர் 20 வரை நீடிக்கும் என்றும், பகல் நேர வெப்பநிலை இயல்பை விட குறைந்த குளிர்ச்சியான சூழ்நிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+