சென்னையில் மழை தீவிரமடையும்.. கொடைக்கானல், குன்னூர் போகாதீங்க! தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை: வானிலை மாற்றம் காரணமாக இன்று சென்னையில் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்திருக்கிறார். மேலும் கொடைக்கானல் மற்றும் குன்னூர் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுப்பெற்றிருப்பதால் வட தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை தொடங்கி டெல்மா மாவட்டமான திருவாரூர், புதுக்கோட்டை வரை இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், "இன்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று மழை தொடங்கும். அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதுமாக பரவலாக மழை இருக்கும்.

டெல்டா மாவட்டங்கள்தான் முதலில் மழையை எதிர்கொள்ளும். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வட இலங்கையிலிருந்து மன்னார் வளைகுடா வழியாக தெற்கு கேரளாவை நோக்கி நகரும். இந்த பாதையில் நகரும்போது உள் தமிழகம் மற்றும் மேற்கு மாவட்டங்கள் கனமழையை எதிர்கொள்ளும்.
சென்னையை பொறுத்தவரை காற்றழுத்த தாழ்வு பகுதி நீண்ட தூரத்தில் இருக்கிறது. ஆனாலும் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை இருக்கிறது. பகலில் தொடங்கும் மழையானது, இரவில் தீவிரமெடுக்கும். இருப்பினும் அதி கனமழைக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை. சென்னை போலவே புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் கனமழை இருக்கும்.
டெல்லாவுக்குதான் அதி கனமழை குறித்த எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும்போது டெல்டா மண்டலங்களில் மழை பெய்யும். சுருக்கமாக சொல்வதெனில் இன்றும் நாளையும் திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதி கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல கொடைக்கானல் மற்றும் குன்னூர் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை அடுத்த 3 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும். காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடலை நோக்கி நகரும்போது கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல் பகுதிகளில் கனமழை பெய்யும். மேற்குறிப்பிட்ட கொடைக்கானல் மற்றும் குன்னூர் பகுதிகளில் அதி கனமழை பெய்யும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும்.
மதுரை, தேனி, தென்காசி விருதுநகர் என தென் தமிழக பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தாழ்வு பகுதி கடக்கும் பாதையை பொறுத்து மழையின் அளவு மாறுபடும். ஒருவேளை இது தென் தமிழகத்தை ஒட்டி கடந்தால் தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி சூறாவளி காற்றுக்கான வாய்ப்பு இல்லை" என்று வெதர்மேன் கூறியுள்ளார்.
-
கோவை டூ குமரி வரை.. இன்று 10 மாவட்டங்களில் விட்டு விளாச போகுது கனமழை.. சென்னைக்கும் அலர்ட் -
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து












Click it and Unblock the Notifications