வங்க கடலில் ’மயிலிறகு’ சென்னைக்கு ஒரு நல்ல செய்தி.. கெட்ட செய்தி! தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்றாரு?
சென்னை: சென்னையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் எனவும், அதன் பிறகு கேடிசிசி எனப்படும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் 28ஆம் தேதிக்கு பிறகு வெயில் அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்தது வெப்ப அலை காரணமாக அதிக வெப்பநிலை பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

அதிகாலை நேரங்களில் வீட்டில் தங்கியிருக்கும் மக்கள் கூட அதீத வெப்பத்தை உணர்ந்தனர். காலை 7 மணிக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் பெண்கள் முதியவர்கள் பச்சிளம் குழந்தைகள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகினர்.
கோடை மழை: இந்த நிலையில் தான் மக்களுக்கு வரப் பிரசாதமாக அமைந்தது கோடை மழை. தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 21ஆம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. சொன்னது போலவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், வட மாவட்டங்கள், கொங்கு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
தமிழ்நாடு வெதர்மேன்: காலையில் லேசாக வெயில் இருந்தாலும் மாலைக்கு மேல் பலத்த காற்றுடன் மழை பொழிவு இருக்கிறது. இதனால் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருவதால் அக்னி வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்து இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் சென்னையில் இன்னும் 2 நாட்களுக்கு மழை இருக்கும் எனவும், அதன் பிறகு வெயில் அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
நல்ல மழை: இதுதொடர்பான அவரது பதிவில்,"திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர், கரூர், புதுக்கோட்டை, தருமபுரி, வால்பாறை, சேலம், ராமநாதபுரம், ஈரோடு ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மே மாதத்தில் வெயில் சதம் அடித்த நிலையில் தற்போது பரவலாக மழை பெய்வது வரவேற்கத்தக்கது. உள் மாவட்டங்களில் இது இன்னும் முடிவடையவில்லை. இதற்கென ஒரு தனி அப்டேட் கொடுக்கப்படும்.

கேடிசிசியில் எப்படி?: கேடிசிசி எனப்படும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளை பொறுத்தவரை, சென்னையில் வழக்கம் போல் கடலோரப் பகுதியில் இரவு முதல் அதிகாலை வரை மழை பெய்தது. இந்த போக்கு கடந்த 4-5 நாட்களாக நடந்து வருகிறது. இதே நிலை 23.05.2024 வரை மேலும் 2 நாட்களுக்கு தொடரும். அடுத்த 2 நாட்கள் சென்னை மக்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். அதற்கு பிறகு மே 28 ஆம் தேதிக்குள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் வெப்பம் திரும்பும். இந்த மே மாதம் சென்னை மாநகரில் ஒரு முறை கூட 40° C பதிவாகவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். கடந்த 20 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே நடந்த மே 40 C குறைந்தால் தப்பிக்க முடியுமா?" என கூறியுள்ளார்.
மழை அளவு: மேலும் அப்பகுதிகளில் இன்று ( 21.05.2024) பதிவான மழை விவரங்களையும் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார். அதன்படி, கத்திவாக்கம் - 24, மணாலி - 22, தண்டையார்பேட்டை - 19, ஆவடி - 18, எண்ணூர் - 18, சென்னை கலெக்டர் அலுவலகம் (பாரிஸ்) - 17, பெரம்பூர் - 16, மாதவரம் - 15, ராயபுரம் - 12, திரு.வி.க. நகர் - 10, உத்திரமேரூர் - 10, மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது" என கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications