சென்னைக்கு அருகே 2 நாள் ஸ்டே பண்ணும் டிட்வா! புதன்கிழமைக்குள் எதிர்பார்த்த மழை கிடைக்கும்! வெதர்மேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் வலுவிழந்த டிட்வா புயல், சென்னை கடலோர பகுதிக்கு அருகே இரு தினங்கள் தங்குவதால் சென்னைக்கு எதிர்பார்த்த மழை கிடைக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Weatheran Ditwah

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் நேற்று இரவு வரை வலுவிழக்காமல் தமிழக கடலோர பகுதிகளுக்கு வந்தது. ஆனால் மேக கூட்டங்கள் இல்லாததால் மழையை கொடுக்க முடியவில்லை. தற்போது இந்த புயல், ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்தது.

இது இன்று பிற்பகல் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவிலும், கடலூர் , காரைக்காலுக்கு 90 கி.மீ. தொலைவிலும், வேதாரண்யத்திற்கு 180 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

டிட்வா புயல் கரையை கடக்காமல் கடலோர பகுதிகள் வழியாக சென்று வலுவிழந்தாலும் சென்னை அல்லது நெல்லூர் அருகே தாழ்வு மண்டலமாகவோ தாழ்வு பகுதியாகவோ நிலை கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்துவிட்டது. இது அடுத்த 2 நாட்களுக்கு, வரும் புதன்கிழமை வரை சென்னை கடலோர பகுதிக்கு அருகே தங்க போவதால் சென்னைக்கு எதிர்பார்த்த மழை இரு நாட்களில் நிச்சயம் கிடைக்கும்.

டிட்வா புயலால் நேற்று எண்ணூரில் 51 மி.மீ. மழையும், இன்று 49 மி.மீ மழையும் பெய்துள்ளது. இரு நாட்களில் மழையானது சீராக இருக்கும். சில நேரங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருக்கிறது.

டிட்வா சென்னைக்கு அருகே நடுக்கடலில் தங்குவதால் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில நேரங்களில் தீவிர மழையும் பெய்யும்.

டிட்வா வலுவிழந்து தமிழக உள்மாவட்டங்களின் மீது இருப்பதால் நீலகிரி, கோவை, ஈரோடு, டெல்டா, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும்.

அது போல் அடுத்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். மிக கனமழை, அதிகனமழைக்கான வாய்ப்புகள் இன்று தமிழகத்தில் இல்லை என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என எச்சரித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+