தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் வெளுக்கப் போகுது மழை.. வானிலை மையம் அப்டேட்! பள்ளி மாணவர்களே அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று இரவு 9 மாவட்டங்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை காலை மழை பெய்யும் பட்சத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவியது. இதன் காரணமாகவே நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த பகுதியானது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வந்தது. இது இன்று அதிகாலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.

இது மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அடுத்த48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் வடகிழக்கு திசை நோக்கி நகரும். இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தமிழ்நாட்டில் இன்று இரவு 9 மாவட்டங்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை காலையும் கனமழை தொடரும் பட்சத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று கருதப்படுகிறது. ஒருவேளை மழை பெய்யவில்லை என்றாலும், குழந்தைகளுக்கு ரெயின் கோட், குடை உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையுடன் கொடுத்து அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications