ரேடாரை பார்த்தா ஷாக்.. சென்னைக்கு மேலே வானத்தில் என்ன நடக்குது? வானிலை வல்லுனரின் வார்னிங்!
சென்னை: சென்னை மற்றும் உள் தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் விடாமல் கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. நேற்று இரவு புரட்டி எடுத்த மழை இன்று அதிகாலை குறைந்துள்ளது. தற்போது மழை இல்லாத லேசான வெயில் நிலவி வருகிறது.

நேற்று இரவு சென்னையில் வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது விடாமல் பெய்யும் மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகாலையில் இருந்து பெரும்பாலான இடங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது. சென்னையில் 10 நாட்களாக விடாமால் 40 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பம் பதிவானது. இந்த நிலையில் தற்போது திடீரென சென்னையில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் பெரும்பாலான தென் பகுதிகளில் இன்று அதிகாலையில் இருந்து மழை இல்லாத லேசான வானிலை மட்டுமே நிலவி வருகிறது. சென்னையில் மழை விட்டாலும் இப்போதும் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்களில் இப்போதும் விடாமல் மழை பெய்து கொண்டு இருக்கிறது. கடந்த 2 மணி நேரமாக இங்கு மழை பெய்து கொண்டு இருக்கிறது.

சென்னை மற்றும் உள் தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உள் தமிழ்நாடு வானிலை குறித்து சென்னை ரெயின்ஸ் வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், 13N அட்சரேகை பகுதியில் காற்று நிலையற்று வீசிக்கொண்டு இருக்கிறது. இதனால் இன்று மீண்டும் உள் தமிழ்நாட்டில் வானிலை மாற்றம் ஏற்படும்.
இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும். அதே சமயம் இந்த காற்று சென்னை பகுதிக்கு சாதகமாக இருக்காது. சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கு இந்த காற்று சாதகமாக இருக்காது.
இதனால் சென்னையில் மழை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இப்போதில் இருந்து சென்னையில் மழை குறைய வாய்ப்புகள் உள்ளன. ரேடார் இமேஜை பார்த்தால் இது வடகிழக்கு பருவமழை போல இருக்கிறது.
தென்மேற்கு பருவமழை போல காட்சி அளிக்காமல் வடகிழக்கு பருவமழை போல காட்சி தருகிறது. இதனால் தமிழ்நாடு, ஆந்திர பிரதேச உள்மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். சென்னையின் வடக்கு நகர பகுதிகளில் தற்போது லேசான மழை பெய்து வருகிறது, என்று சென்னை ரெயின்ஸ் வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications