வங்கக்கடலில் ஆட்டம் காட்டும் "கடல் ராசா".. உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. மழை வெளுக்குமா?
சென்னை: வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. வடக்கு ஆந்திரா - தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறுவதற்கான சாதகமான சூழல் உள்ளது. ஆனால் புயலாக மாற்றம் அடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடலில் இந்த தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது.
பொதுவாக புயல் உருவாவது எப்படி?: பொதுவாக ஒரு சுழற்சி கடலுக்கு மேலே இருக்க வேண்டும். இது வெப்ப நிலை காரணமாக வலிமை அடைந்து தாழ்வு மண்டலமாக மாறும்.

1, இந்திய தாழ்வு மண்டலம் வலிமை அடைந்து புயல் ஏற்பட கடலின் மேல் வெப்பநிலை 26 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்க வேண்டும். அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படுகிறதே, அதன் மையத்தில் இந்த வெப்பநிலைக்கு மேல் இருக்க வேண்டும்.
2, அல்லது காற்றழுத்த தாழ்வு பகுதியின் மையத்தில் இதை விட அதிக வெப்பநிலை இருக்க வேண்டும். அந்த வெப்பநிலை இருந்தால் மட்டுமே புயலுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். தற்போது கோடைகாலம் என்பதால் இந்த சூழ்நிலை சரியாக உள்ளது.
3. அதேபோல் கடலுக்கு நடுவே.. நிலத்தில் இருந்து இன்னும் நீண்ட தூரத்தில் இருந்தால் கண்டிப்பாக இது புயலாக மாறும். எவ்வளவுக்கு எவ்வளவு பூமியில் இருந்து தூரத்தில் இருக்கிறதோ அவ்வளவு நல்லது. அப்போதுதான் அது முழுதாக உருவாக முடியும்.
4. ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் பூமிக்கு அருகில் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுவோம். இது முழுமையாக உருவாகும் முன் அது கரையை கடக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் பல தாழ்வு மண்டலங்கள் புயலாக மாறாமல் போய் இருக்கின்றன.
5. அதேபோல் இன்னொரு விஷயம் வறண்ட காற்று. இந்த வறண்ட காற்று பொதுவாக தாழ்வு மண்டலம் உருவாக விடாமல் தடுக்கும். வறண்ட காற்று காரணமாக தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை இழக்கும். குளிர்ந்த காற்று இருந்தால் தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை அடையும்.
6.வறண்ட காற்று என்பது தாழ்வு மண்டலத்தை செயல் இழக்க செய்யும், ஆக்ரோஷத்தை குறைக்கும் ஒன்றாகும். இப்போது கோடைகாலம் என்றாலும் கடந்த வாரம் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வந்த குளிர்ந்த காற்று புயலுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கிவிட்டது.
இந்த விஷயங்கள்தான் பொதுவாக ஒரு புயல் உருவாவதற்கான சூழ்நிலையை தீர்மானிக்கும். இந்த விஷயங்கள் சாதகமாக அமைந்தால் புயல் உருவாவதற்கான ஏற்ற சூழ்நிலைகள் இருக்கும். வங்கக்கடலில் இந்த எல்லா விஷயங்களும் தற்போது புயலுக்கு சாதகமாக உள்ளது. இதனால் அந்த புயல் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
புயல் சின்னம்: வங்கக்கடலில் தற்போது புயல் சின்னம் உருவாகி வரும் நிலையில்.. வங்கக்கடலில் புயலுக்கு ஏற்றபடி வானிலையில் திடீரென பல்வேறு மாற்றங்கள் நடக்க தொடங்கி உள்ளன.
தமிழ்நாட்டில் கோடை காலம் முடிந்த நிலையில் சூடு தணிந்து.. தற்போது அவ்வப்போது கடுமையாக மழை பெய்து வருகிறது. அதன்படி 3 நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்டு உள்ளது.
புயல் வருகிறது: இந்த மழைக்கு இடையே திடீரென வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அடுத்த சில தினங்களில் இந்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்புள்ளது. இது புயலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. அடுத்த வாரம் இந்த தாழ்வு பகுதி புயலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் சென்னை டூ தென் மாவட்டங்கள் வரை மொத்தமாக பரவலாக மழையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு ஆந்திரா - தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த இரண்டு நாட்களில் வடக்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 11ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
கோவை டூ குமரி வரை.. இன்று 10 மாவட்டங்களில் விட்டு விளாச போகுது கனமழை.. சென்னைக்கும் அலர்ட் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications