வங்கக்கடலில் ட்விஸ்ட்.. இனிதான் மெயின் பிக்சர்.. காற்றழுத்த தாழ்வு மையம் விஸ்வரூபம் எடுப்பது ஏன்?
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. கடல் சீற்றம் மற்றும் பரவலான மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதால், பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததை விட வேகமாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது.
அக்டோபர் 16 அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய வட மாவட்டங்களிலும் சாரல் மழை பதிவாகி, சில நகர்ப்புறங்களில் நீர் தேங்கியுள்ளது.

தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் கேரளா-கர்நாடகா கடலோரப் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. இது அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அக்டோபர் 21-ம் தேதிக்குள் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது பின்னர் மத்திய மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் தாழ்வு மண்டலமாக மாறி, தமிழக கடற்கரையை நெருங்கும்போது பரவலான மழையைக் கொண்டு வரலாம்.
வேகமாக வலிமை அடையும் தாழ்வுப்பகுதி
பொதுவாக தாழ்வுப்பகுதி கடலுக்கு மேலே இருக்க வேண்டும். இது வெப்ப நிலை காரணமாக வலிமை அடைந்து தாழ்வு மண்டலமாக மாறும். இப்போது உருவாகி உள்ள தாழ்வுப்பகுதி அதற்கு ஏற்ற சூழலில் உள்ளது.
தாழ்வுப்பகுதி தொடர்ந்து வலிமை அடைய கடலின் மேல் வெப்பநிலை 26 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்க வேண்டும். அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படுகிறதே, அதன் மையத்தில் இந்த வெப்பநிலைக்கு மேல் இருக்க வேண்டும். அல்லது காற்றழுத்த தாழ்வு பகுதியின் மையத்தில் இதை விட அதிக வெப்பநிலை இருக்க வேண்டும். அந்த வெப்பநிலை இருந்தால் மட்டுமே தாழ்வு மண்டலம் உருவாவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவும். தற்போது மழைக்காலம் என்றாலும் கூட.. இந்த சூழ்நிலை சரியாக உள்ளது.
அதேபோல் கடலுக்கு நடுவே.. நிலத்தில் இருந்து இன்னும் நீண்ட தூரத்தில் இருந்தால் கண்டிப்பாக இது வலிமையான தாழ்வு மண்டலமாக மாறும். எவ்வளவுக்கு எவ்வளவு பூமியில் இருந்து தூரத்தில் இருக்கிறதோ அவ்வளவு நல்லது. அப்போதுதான் அது முழுதாக உருவாக முடியும். ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி பூமிக்கு அருகில் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுவோம். இது முழுமையாக உருவாகும் முன் அது கரையை கடக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் பல தாழ்வு மண்டலங்கள் உருவாகாமல் போகும்.
அதேபோல் இன்னொரு விஷயம் வறண்ட காற்று. இந்த வறண்ட காற்று பொதுவாக தாழ்வு மண்டலம் உருவாக விடாமல் தடுக்கும். வறண்ட காற்று காரணமாக தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை இழக்கும். குளிர்ந்த காற்று இருந்தால் தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை அடையும். வறண்ட காற்று என்பது தாழ்வு மண்டலத்தை செயல் இழக்க செய்யும், ஆக்ரோஷத்தை குறைக்கும் ஒன்றாகும். இப்போது சூழ்நிலை எல்லாம் சரியாக இருப்பதால்.. காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலிமை பெற்று வருகிறது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்பு
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவுப் பகுதியில் கேரள-கர்நாடக கடற்கரையில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளது இந்த வானிலை அமைப்புகளின் தாக்கத்தால், அக்டோபர் 22 முதல் 24 வரை வட கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பிராந்திய வானிலை ஆய்வு மையம் (RMC) வெளியிட்ட எச்சரிக்கையின்படி, இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் வலுப்பெறுவதன் காரணமாக கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழைப்பொழிவு குறித்த முன்னறிவிப்பு:
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20): தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
திங்கட்கிழமை (அக்டோபர் 21): செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 22): சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட வட கடலோரப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மிகக் கனமழை முதல் அதிக கனமழை பெய்யக்கூடும். கடலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் மிதமான மழை, இடி மின்னலுடன் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26°C ஆகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதிகளால் கடல் சீற்றமாக இருக்கக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications