தற்காலிக புயல் என்று சொல்லப்பட்ட.. பெஞ்சல் புயல் சென்னையை போட்டு சுழற்றி அடிப்பது ஏன்? காரணம் பேண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்காலிக புயல் என்று கூறப்பட்ட பெஞ்சல் புயல் சென்னையை போட்டு சுழற்றி அடித்துக்கொண்டு இருக்கிறது. இந்த புயல் சென்னையில் பலத்த சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

பெஞ்சல் புயல் நாளை கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னைக்கு 110 கிமீ தொலைவில் 13 கிமீ வேகத்தில் பெஞ்சல் புயல் நாளை கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதே வேகத்தில் புயல் தொடர்ந்து நகரும் வாய்ப்புகள் இல்லை. போக போக புயல் நகரும் வேகம் குறையும். இதனால் இன்று கரையை கடக்காமல் நாளைதான் புயல் கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன.

weather tamilnadu weatherman summer weather news

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை நீர் தேங்க தொடங்கியுள்ளதால் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு பயணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சென்னையில் தொடர் கனமழை காரணமாக 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டு உள்ளன. எழும்பூர், ஆர்பிஐ, பெரம்பூர், பழவந்தாங்கல், ரங்கராஜபுரம், திருவொற்றியூர் அஜாக்ஸ், ரித்தர்ட் டன் ரோடு, ராஜா முத்தையா சாலை, மில்லர்ஸ் ரோடு, அண்ணா பிளை ஓவர் சர்வீஸ் ரோடு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.

தற்காலிக புயல்: தற்காலிக புயல் என்று வரையறுக்கப்பட்ட புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. பொதுவாக இந்தியாவில் ஏற்படும் புயல்கள் அதன் வேகத்தை பொறுத்து வரையறுக்கப்படும். இந்த நிலையில்தான் பெஞ்சல் புயல் தற்காலிக புயல் என்று வரையறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்காலிக புயல் என்றால் என்ன என்று அறியும் முன்.. புயல்கள் வகைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
பொதுவாக இந்தியாவில் ஏற்படும் புயல்களின் முக்கிய வகைகள் வெப்பமண்டல சூறாவளிகள் என்று அழைக்கப்படும். இவை அதன் வேகத்தை பொறுத்து வரையறுக்கப்படுகிறது.

காற்றழுத்த தாழ்வு நிலை: மணிக்கு 31 கிலோமீட்டருக்கும் குறைவான காற்றின் வேகம் (17 நாட்ஸ்) கொண்டவை.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை: காற்றின் வேகம் மணிக்கு 31 முதல் 49 கிலோமீட்டர்கள் (17 முதல் 27 நாட்ஸ்) கொண்டவை.

சூறாவளி புயல்: காற்றின் வேகம் மணிக்கு 62 முதல் 88 கிலோமீட்டர்கள் (34 முதல் 47 நாட்ஸ்) கொண்டவை.

கடுமையான சூறாவளி புயல்: காற்றின் வேகம் மணிக்கு 89 முதல் 118 கிலோமீட்டர்கள் (48 முதல் 63 நாட்ஸ்) கொண்டவை.

மிகக் கடுமையான சூறாவளி புயல்: காற்றின் வேகம் மணிக்கு 119 முதல் 221 கிலோமீட்டர்கள் (64 முதல் 119 நாட்ஸ்)

சூப்பர் சைக்ளோனிக் புயல் - அதி தீவிர புயல்: காற்றின் வேகம் மணிக்கு 221 கிலோமீட்டருக்கு மேல் (119 நாட்ஸ் மற்றும் அதற்கு மேல்) கொண்டவை.

தற்காலிக புயல்: இப்படிப்பட்ட நிலையில்தான் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள புயல் தற்காலிக புயல் என்று அறிவிக்கப்பட்டது. தற்காலிக புயல் என்றால் புயல் உருவாகி சில மணி நேரத்திற்குள் வலிமை இழக்கும் புயல் ஆகும். அதாவது தாழ்வு மண்டலம்.. புயலாக மாறி சில மணி நேரத்திற்குள் வலிமை இழந்து பின்னர் கரையை கடந்தால் அது தாற்காலிகப் புயல் ஆகும்.

ஆனால் இங்கே பெஞ்சல் புயல் வேகமாக வலிமை இழக்கும் என்று நினைத்தால்.. அப்படி ஆகாமல் வலிமை அடைந்து கொண்டே இருக்கிறது. அதோடு வேகமாக நகரவும் தொடங்கி உள்ளது. இது பேண்ட் பேண்ட் ஆக மழையை கொண்டு வருகிறது. அதாவது அலை அலையாக மேகங்கள் வர தொடங்கி உள்ளன.

ஒரு செட் மேகம் சென்றால் உடனே சில மணி நேரங்களில் அடுத்த செட் மேகம் வருகிறது. இந்த தொடர் மேகங்கள்தான் கனமழைக்கு முக்கியமான காரணமாக மாறி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+