பெட்ரோல், டீசல்- செஸ் வரியை குறைக்காத மத்திய அரசு- மாநில அரசுகளிடம் பந்தை திருப்பிவிடும் கண்ணாமூச்சி
டெல்லி: பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை குறைக்காமல் மாநில அரசுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கலால் வரியைத்தான் மத்திய அரசு குறைத்துள்ளன. இந்த நடவடிக்கையால் வருவாய் இழப்பை எதிர்கொண்டிருக்கும் மாநில அரசுகளிடம், உங்களுக்கு கிடைக்கும் வருவாய்க்கான வாட் வரியையும் குறைத்து கொள்ளுங்கள் என மத்திய அரசு பந்தை திருப்பிட்டுக் கொண்டிருப்பது ஆரோக்கியமான போக்கு அல்ல என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்பதான் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தே பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்ய தொடங்கிவிட்டன. மத்தியில் 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் பெட்ரோல், டீசல் விலை என்பது வழக்கமான மாற்றத்துக்குரியதாகிவிட்டது.
பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு 2 விதமான வரிகளை விதிக்கின்றன. அதில் ஒன்று கலால் வரி, மற்றொன்று செஸ் வரி. இதில் கலால் வரி மூலமான வருவாய் மத்திய- மாநில அரசுகள் பங்கிட்டுக் கொள்வது. செஸ்வரி வருவாய் என்பது மத்திய அரசுக்கு மட்டுமே சொந்தமானது.

கலால் வரி, செஸ்வரியை மத்திய அரசுதான் தீர்மானிக்கிறது.
இந்த 2 வரிகள் இல்லாமல் பெட்ரோல், டீசல் மீது மாநில அரசுகள் வாட் வரியை விதிக்கின்றன.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை, மத்திய அரசின் செஸ் வரி- கலால் வரி மற்ற்றும் மாநில அரசின் வாட் வரி ஆகியவை இணைந்துதான் பெட்ரோல், டீசலின் மொத்த விலை.
2014-ம் ஆண்டு 1 லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசின் வரிகள் (செஸ், கலால் வரிகள்) ரூ. 9.48 ஆக இருந்தது.
2014-ம் ஆண்டு 1 லிட்டர் டீசலுக்கு மத்திய அரசின் வரிகள் (செஸ், கலால் வரிகள்) ரூ.3.57 ஆக இருந்தது.
2014-ம் ஆண்டு 1 லிட்டர் பெட்ரோல் மீதான தமிழ்நாடு- மாநில அரசின் வரி (வாட் வரி) ரூ. 15.67 ஆக இருந்தது.
2014-ம் ஆண்டு 1 லிட்டர் டீசல் மீதான தமிழ்நாடு- மாநில அரசின் வரி (வாட் வரி) ரூ.10.25 ஆகவும் இருந்தது.
பொதுவாக 2014-ம் ஆண்டு 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 71.74க்கும்; 1 லிட்டர் டீசல் ரூ 62.27க்கும் விற்பனை செய்யப்பட்டது.
-------------------------------------
2021-ம் ஆண்டு 1 லிட்டர் பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரிகள் ரூ. 32.90 ஆக இருந்தது.
2021-ம் ஆண்டு 1 லிட்டர் டீசலுக்கான மத்திய அரசின் வரிகள் ரூ. 31.80 ஆக இருந்தது.
கடந்த 2021-ம் ஆண்டு மத்திய அரசு
1 லிட்டர் பெட்ரோல் மீது ரூ.5;
1 லிட்டர் டீசல் மீது ரூ.10 ரூபாய் என மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய கலால் வரிகளைக் குறைத்தது. ஆனால் மத்திய அரசுக்கு வருவாய் தரக் கூடிய செஸ்வரியில் மாற்றம் செய்யவில்லை.
2021-ல் மத்திய அரசின் வரி குறைப்பு இந்த அறிவிப்புக்கு பின்னர்
1 லிட்டர் பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரி ரூ.27.90 ஆக இருந்தது.
1 லிட்டர் டீசல் மீதான மத்திய அரசின் வரி ரூ.21.80 ஆக இருந்தது.
அதாவது 2014-ம் ஆண்டை ஒப்பிடுகையில் பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரி உயர்வு என்பது மிகப் பெரிய அளவில் அதிகரித்திருந்தது. அந்த அதிகரிக்கப்பட்ட வரியில் சிறிது அளவைத்தான் மத்திய அரசு குறைத்தது.
உத்தேசமாக 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது
1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.18.42; 1 லிட்டர் டீசலுக்கு ரூ.18.23 கூடுதல் வரி விதித்துள்ளது மத்திய அரசு. இது 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற போது இருந்த வரிகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 300%- 500% அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
உதாரணமாக 2014-15ம் ஆண்டில் அதாவது மத்திய பாஜக அரசின் முதலாமாண்டில் பெட்ரோல் மீதான கலால் வரி மூலம் ரூ29,279 கோடி; டீசல் மூலம் ரூ42,881 கோடி வருவாய் ஈட்டியது மத்திய அரசு.
ஆனால் 2020-21 ஆம் நிதி ஆண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.3,89,622 கோடி. அதற்கு முந்தைய 2019-20 ஆம் நிதி ஆண்டில் இந்த வருவாய் என்பது ரூ.2,39,452 கோடியாக இருந்தது. ஒப்பீட்டு அளவில் ஒரே ஆண்டி 63% கூடுதல் வருவாயை மத்திய அரசு பெற்றது.
மத்திய அரசுக்கு செஸ் மற்றும் கலால் வரிகள் மூலம் எப்போதும் வருவாய் கிடைத்தது. ஆனால் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய கலால் வரி குறைந்தது. இதனால் பெட்ரோல் டீசல் மூலமாக மத்திய அரசின் கலால் வரியில் இருந்து 2019-20-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு ரூ.1,163.13 கோடி வருவாய் கிடைத்த நிலைமை மாறி 2020-21-ம் ஆண்டில் ரூ837.75 கோடியாக குறைந்து போனது.
2021-ம் ஆண்டு மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்ததன் மூலம் தமிழ்நாடு அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் இழப்பு மட்டும் ரூ1,050 கோடி.
நிற்க.
இப்போதும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைத்தான் குறைத்துள்ளது. ஆம் மாநில அரசுகளுடன் வருவாயை பகிர்ந்து கொள்ளக் கூடிய கலால் வரியைத்தான் மத்திய அரசு குறைத்துள்ளது. அதாவது 1 லிட்டர் பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ8; டீசல் மீதான கலால் வரியை 6 ரூபா என குறைத்தது மத்திய அரசு. இதனால் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.9.50; 1 லிட்டர் டீசல் விலை ரூ.7 வரையும் குறையும் என்கிறது மத்திய அரசு.
உண்மைதான்... அதேநேரத்தில் 2-வது முறையாக மத்திய அரசு, மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய கலால் வரியில் கையை வைத்திருக்கிறது. இதனால் மீண்டும் மாநில அரசின் வருவாய் கடுமையாக குறையத்தான் வாய்ப்பிருக்கிறது. அதாவது 2021-ம் ஆண்டு மத்திய அரசு கலால் வரியை குறைப்பதாக சொன்ன போது, தமிழ்நாடு அரசுக்கான வருவாய் இழப்பு ரூ1,050 கோடி. இப்போது மீண்டும் கலால் வரியை மத்திய அரசு குறைத்திருப்பதாக அறிவிப்பதிருப்பதால் தமிழ்நாடு அரசுக்கு மேலும் வருவாய் இழப்புதான் அதிகரிக்கப் போகிறது.
ஆனால் இதனை பகிரங்கமாக சொல்லாமல், இனி மாநில அரசுகள் பெட்ரோல்-டீசல் மீதான மதிப்பு கூட்டுவரி எனப்படுகிற வாட் வரியை குறைத்து கொள்ள வேண்டும் என்கிறது மத்திய அரசு. ஏற்கனவே கலால் வரி மூலம் கிடைத்த வருவாய் கணிசமாக இழப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் வாட் வரியையும் குறைத்து மாநிலங்களின் நிதி நிலைமையை சீர்குலைக்கவே செய்கிறது மத்திய அரசு என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
இதனால்தான் மத்திய அரசு கலால் வரியை குறைத்தாலும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் உடனடியாக வாட் வரியை குறைக்க முன்வருவது இல்லை.
இதற்கு மாறாக மத்திய அரசானது தமக்கு மட்டுமே வரக் கூடிய பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை விட்டுக் கொடுக்க- அதாவது பெட்ரோல் டீசல் மீதான செஸ் வரியை ஏன் குறைக்க முன்வருவதில்லை என்பதுதான் பொருளாதார வல்லுநர்களின் கேள்வி. இதனையேதான் அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
அதாவது பெட்ரோல், டீசல் மீதான வரியை 2-வது முறையாக மத்திய அரசு குறைத்துவிட்டது; ஆனால் மாநில அரசுகள்தான் ஒத்துழைக்கவில்லை என்கிற ஆகப் பெரும் பொய் பழியை மத்திய அரசு மாநிலங்கள் மீது திணிக்கிறது.
உண்மையில் மத்திய அரசின் இந்த கபடத்தனமான கலால் வரி மட்டுமே குறைப்பின் மூலம் வருவாயை இழந்து நிற்கும் மாநில அரசுகள், தங்களுக்கு ஆகக் குறைந்தபட்சம் வருவாய் தரக் கூடிய வாட் வரியையும் குறைப்பது என்பது எப்படி சாத்தியமாகும்? அதை செய்தே ஆக வேண்டும் என மத்திய அரசு திணிப்பது என்பது எப்படி மெய்யான கூட்டாட்சியின் மனசாட்சியாக இருக்க முடியும்? என்பதுதான் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில சுயாட்சிகளை முழங்கும் மாநிலங்களின் யதார்த்தமான கேள்வி.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ்












Click it and Unblock the Notifications