For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாய்விட்டு சிரிச்சா... நோய் விட்டுப் போகும்ங்க... இன்று உலக சிரிப்பு தினம்

Google Oneindia Tamil News

சென்னை: இன்று சர்வதேச சிரிப்பு தினம் (World Laughter Day, May First Sunday ). இதை இந்தியாவை சேர்ந்த டாக்டர் மதன் கதாரியா (Dr. Madan Kataria) 1998 ஆம் ஆண்டு உருவாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மும்பையை தலைமை இடமாக கொண்டு சர்வதேச நாடுகள் முழுக்க இயங்கி வரும் ‘லாப்டர் யோகா இயக்கத்தை (Laughter Yoga Moveemen) தொடங்கியவர்.

இந்தத் தினத்தில் இந்தியாவில் லாப்டர் கிளப்பை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக போய் கொண்டாடுகிறார்கள். இந்தத் தினம் மதம், இனம் தாண்டி லாப நோக்கம் எதுவும் இன்றி கொண்டாடப்படுகிறது.

சிரிப்பு வருது... சிரிப்பு வருது

சிரிப்பு வருது... சிரிப்பு வருது

முதல் உலக சிரிப்பு தின கொண்டாட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மும்பையில் ஒரே இடத்தில் கூடி மகிழ்ந்தனராம்.

6,000 சிரிப்பு கிளப்...

6,000 சிரிப்பு கிளப்...

இந்தியாவுக்கு வெளியே முதல் உலக சிரிப்பு தினம் 2000 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் லாப்டர் கிளப்கள் உருவாக்கப்பட்டு இந்தத் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் 6,000 க்கும் மேற்பட்ட கிளப்கள் இருக்கின்றன.

ப்ளீஸ்... சிரிங்களேன்...

ப்ளீஸ்... சிரிங்களேன்...

இந்தத் தினத்தில் இந்தியாவில் லாப்டர் கிளப்பை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக போய் கொண்டாடுகிறார்கள். கையில் பேனர்கள் ஏந்தியபடி செல்கிறார்கள். அதில், கீழ்வருமாறு வாக்கியங்கள் இருக்குமாம்.

‘சிரிப்பு மூலம் உலக அமைதி'

வாழ்க்கைக்காக சிரிப்பு,

அன்பும் சிரிப்பும்,

சிரிப்புக்கு மொழி இல்லை,

சிரிப்பு ஒரு உலக மொழி,

ஹோ ஹோ ஹா ஹா, சிரிப்பு - ஒரு பாசிடிவ் சக்தி.

சூப்பரா சிரிச்சா ப்ரைஸ்...

சூப்பரா சிரிச்சா ப்ரைஸ்...

சிறப்பாக சிரிக்கும் சிறுவர் - சிறுமிகள், பெண்கள், வயதானவர்களுக்கு பரிசும் அளிக்கப்படுகிறது.

English summary
World Laughter Day celebrations will include a laughter session with simple, inclusive and very fun laughter exercises, and possibly a picnic, games, music or face-painting. Everyone is welcome to attend regardless of age, experience, fitness or mobility, and the more the merrier!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X