#FathersDay... "என் அப்பா".. தட்ஸ்தமிழ் வாசகர்களின் உணர்ச்சிப் பதிவுகள்!!
சென்னை: ஜூன் 19.. தந்தையர் தினம்... தந்தையர் தினத்தையொட்டி வாசகர்களிடம் தங்களது தந்தை குறித்த நினைவுகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டிருந்தோம். வந்து குவிந்து விட்டன உணர்ச்சிப் பதிவுகள்.
ஒவ்வொருவருக்கும் தந்தை ஞானம் போதிப்பவர் தந்தைதான். அது மட்டுமல்லாமல் தாயுமாகவும் இருக்கும் தந்தைகளும் அதிகம். அந்த வகையில் தந்தை குறித்து பிள்ளைகள் நம்முடன் பகிர்ந்து கொண்டதிலிருந்து சில உங்களுக்காக
இது இன்னும் வரும்.. மேலும் மேலும் வரும்.

மார்கழி மாத குளிரில்...
நமது வாசகர் ராமச்சந்திரன் தனது தந்தை குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டது...
மார்கழி மாத குளிரில் நான் அதிகாலையில் தூங்கி கொண்டிருக்கும்போது, என்னை மெதுவாக நகர்த்தி, பாயிலிருந்து விலகி தரையில் படுத்து கொண்டிருக்கும் என்னை ஒழுங்காக பாயில் படுக்க வைத்து விட்டு போர்வையை போற்றி விட்டு அதிகாலை வேலைக்கு புறப்பட்டுப் போகும் என் அப்பாவை என்னால் சாகும் வரை மறக்க முடியாது...
நெகிழ்ச்சியுடன் ஆர். ராஜேஷ்...
Dear One India Team,
I'm Rajesh Ramamoorthy from Karuvalakarai , Mayiladuthurai. My Father name is Ramamoorthy.R.
I wish my father a fantastic fathers day and wish all for the same.
My Father is basically a Farmer and we belongs to farmer family. He is holding many positions right now including business, political, Panchayat board president etc.
He is a uneducated and he is very strict on his duties. He is punctual and he is my inspiration too.
He is a hardworker that's what today his place is very high and no one can replace his position.
I wish my father a pleasant and enjoyable fathers day.
Thanks team for this celebration. Your job is appreciated.
Thanks,
R.Rajesh

தந்தையர் தேசத்திலிருந்து பால.பாரதி
தந்தை..,
சில விஷயங்களை சொல்லில் கொட்டிவிட முடியும்...!
ஆனால்...
தந்தைகளின் உழைப்பினை...
நமக்காக அவர்கள் படும் அவமானத்தினை...
நம்மை காப்பற்ற...
நம் கல்வி பேண...
கடனுக்காக ஏங்கி நின்ற வாசல்கள் ஒரு வேளை...
சொல்லக் கூடும்.
வலிகள் விழி திறக்க தன் தேவைகளை
மறைத்தபடி...
நமக்கு சைக்கிள் வாங்கி தரும் தருணம்.
அடடா...
கண்ணில் நீர் நிறைக்க நன்றிகள் சொல்வது எங்ங்னம்...
ஒரு வழிதான்
தந்தையின் தந்தையாவதே ?
நம் மகனுக்கும் நல் தந்தையாவதே !
பால. பாரதி...
நேபாள தேசத்திலிருந்து...
ஆம் தந்தையர் தேசத்திலிருந்து

அறிவு வளர்த்த தந்தை.. இஸ்மாயில்
நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது எங்களை பாடபுத்தகங்களை மட்டும் படிப்பவர்களாக இல்லாமல் நாளிதழ் முதல் வார இதழ்கள் மாத இதழ்கள் எல்லாவற்றையும் வாங்கி தந்து எங்களை படிக்கும்படி கட்டாயப்படுத்தும் போது மனதிற்குள் ஆத்திரம் கொண்டு வெறுப்புடன் படித்த எங்களுக்கு இன்று வாசிப்புதிறனின் பயணும் பொது அறிவு பலனும் எத்தனை சிறப்புமிக்கது என்று நாங்கள் உணர்ந்து அதை எங்கள் வாரிசுகளுக்கம் உணர்த்தும் உன்னத பாக்கியத்தை உருவாக்கி தந்த எங்கள் தந்தைக்கு பிள்ளைகளாக பிறந்ததை எண்ணி பெருமிதம் கொள்கிறேன் - இ ஹ இஸ்மாயில், தோப்புத்துறை.

நம்பிக்கையை விதைத்த அப்பா.. சிவமணி
அபுதாபியைச் சேர்ந்த சிவமணி தனது தந்தை குறித்து எழுதியுள்ள கவிதை

அப்பாவிடம் பெற்றதும் கொடுத்ததும்... ஜெயக்குமார்
சிங்கப்பூரைச் சேர்ந்த வாசகர் J ஜெயக்குமார் தனது தந்தை குறித்து எழுதியுள்ள கவிதை
படித்ததில்லைநீங்கள்
படித்திருக்கிறேன்
உங்களிடம்நான்
உன்னதநெறிகளை
அளவுக்குஅதிகமாய் ...
உழைப்புஎன்பதை
உழைத்துஉழைத்து
உழன்றுபோகாமல்
உழைப்பின்உருவகமாய்
உங்களைரசித்திருக்கிறேன் ...
விவசாயம்சிலசமயம்
வரவுகளை கொடுக்க
உங்களுக்குமறந்திருந்தாலும்
நீங்கள்வெறுத்ததில்லை
அதன்மீதானகாதலை ...
பிள்ளைகள்மீது
பற்றால்மகன்மகளுக்காக
ஒருசேரஉழைக்கும்
ஒருபடிக்காத
பகுத்தறிவாளன் ...
உங்களிடமிருந்துபெற்றிருக்கிறேன்
பெருவிலையை ..
என்னிடம்நீங்கள்
பெற்றுகொண்டது
மகனின்பாசம்ஒன்றை .

அப்பா மட்டுமல்ல, கடவுளும் கூட.. கே.சரவணன்
கே.சரவணன் தனது தந்தை கூறியுள்ளது இது... In my life he is not father only god come to me serve as a father .everybodys have father but i have god is serve me a father.

மறு பிறப்பு கொடுத்த தந்தை.. ரவிக்குமார் கண்ணப்பன்
ரவிக்குமார் கண்ணனப்பன் தனது தந்தை குறித்துக் கூறியது இது... He is a man who created me in 1991 through that I came to this world. During 2000 he given rebirth to me ,saved me from electric shock. Today I am seeing this world by him. There is no replacement to father sacrificing their life behalf of their family until their last breath.

அப்பாவுக்காக.. எம்.பாண்டித்துரை
சிங்கப்பூரைச் சேர்ந்த எம்.பாண்டித்துரை தனது தந்தை மாரியப்பன் குறித்து நெகிழ்ந்துள்ளது இது...
It's for my APPA, Now my age is 25 I am in Singapore now,till we talk about like a friend only..He is very gud person we both are don't know about how to share feelings and emotions.if I start think about him automatically my eyes are raining with Tear's.He is a washerman I think till now I never did anything without discuss with him. I love you Appa....
Father name: Mariyappan

தியாகம் தாயென்றால்.. என் அப்பா தியாகத் தீ... பாலா
வாசகர் பாலா தனது தந்தை குறித்துக் கூறியது இது... எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் இன்று வரை இல்லையென்றும். இடித்துரைத்தும் சொன்னதில்லை. அனைவரையும் சார் போட்டு அழைக்கும் மரியாதை. 100 கோடிக்கு அதிபரானாலும். பணத்தை விட மனிதம் முக்கியம் என எப்போதுமே சொல்லுபவர். இப்போதும் வணங்கி வார்தையாடுபவர். எவ்வளவோ துயர் பட்டபோதும் துளியும் வெளிக்காட்டாத வீர மாமுனிவர். வெல்லக்கட்டி வார்த்தைகாரர். இப்போதும் அவர் என்னை வாழ்நாள் முழுதும் அடிக்கவே இல்லை என்ற குறை எனக்குன்டு. நான் மன்னிக்கவே முடியாத குற்றம் செய்த போதும். ஆயுள் தண்டனையை அடிக்காமல் குடுக்க முடியுமா என்றால். நான் ஆணி தரமாய் சொல்வேன் ஆமாம் என்று. தந்தை மகனுக்கு எவ்வளவோ தொண்டாற்றினாலும் மகனிடம் அவர் எதிர்பாற்பதேன்னமோ.. பாச பார்வை மட்டுமே தொலைதூர பணதேடுதலில் பயண பட்டு வந்த என் போன்ற மரக்கட்டை மகனிடம் அந்த பார்வை கூட கிடைக்காமல் கண் மூடும் ஆயிரகணக்கான அப்பாக்களுக்கு
என் கண்ணீர் கழுவல்கள் ..அப்பாக்களின் காலடியில்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications