Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய ராணுவத்தில் 1.77 லட்சம் சம்பளத்தில் வேலை.. பி.இ முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.. செம வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய ராணுவத்தில் எஸ்எஸ்சி பிரிவில் காலியாக உள்ள டெக்னிக்கல் மற்றும் நான் டெக்னிக்கல் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 380 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பி.இ, பிடெக் படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ரூ.56 ஆயிரம் முதல் ரூ.1.77 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ராணுவ ஆட்சேர்ப்பு பிரிவு நடத்தி வருகிறது. பணியிடங்களுக்கு தகுந்தபடி அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்சேர்ப்பு நடைபெறும். ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கு பல லட்சக்கணக்கான இளைஞர்கள் ராணுவ வேலைக்காக தயாராகி வருகிறார்கள்.

Indian Army SSC Tech Recruitment 2026 Applications Open for 381 Men amp amp Women Posts

பணியிடங்கள் விவரம்:

இந்த நிலையில் இந்திய ராணுவத்தில் எஸ் எஸ்சி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:-

* எஸ்எஸ்சி 67 (தொழில்நுட்பம்) ஆண்கள் - 350
* எஸ்எஸ்சி 67வது (தொழில்நுட்பம்) பெண்கள் - 29
* எஸ்எஸ்சி டபிள்யூ டெக்-67 - 01
* எஸ்எஸ்சி டபிள்யூ ( Non டெக்னிக்கல்) - 01 என மொத்தம் 380 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி:

துறை சார்ந்த பிரிவில் என்ஜினியரிங் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பி இ, பிடெக், ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முழு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு:

20 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். அதாவது விண்ணப்பதாரர்கள் 1999-க்கு முன்போ, 2006 க்கு பிறகோ பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

சம்பளம் எவ்வளவு:

லெப்டினன்ட் பதவி - ரேங்க் - ரூ.56,100 - 1,77,500/- தேர்வு முறையை பொறுத்தவரை மெரிட் லிஸ்ட், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தேர்வர்கள் https://www.joinindianarmy.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 05.02.2026 கடைசி நாளாகும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் போது, அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.joinindianarmy.nic.in/Authentication.aspx

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+