Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகுல் காந்திக்கு அதிர்ச்சி கொடுத்த கர்நாடக மக்கள்.. காங்கிரஸ் அரசு நடத்திய சர்வேயில் பயங்கர ஷாக்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இதனால் ஒரு தரப்பினர் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்தவும் வலியுறுத்துகிறார்கள். இந்தச் சூழலில் கர்நாடகாவில் நடத்தப்பட்ட ஆய்வில் மக்கள் அதற்கு நேர்மாறான கருத்துகளைக் கூறியுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது மக்கள் நம்பிக்கை அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாகவே வாக்குப்பதிவு இயந்திரங்களிலேயே தேர்தல் நடத்தப்படுகிறது. இதன் மூலம் செலவும், நேரமும் பல மடங்கு மிச்சமாகிறது. அதேநேரம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடப்பதாக எதிர்க்கட்சிகளில் தொடர்ந்து சாடி வருகிறார்கள். மேலும், ஒரு தரப்பினர் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.

Karnataka Govt Survey Shows 83 Trust EVMs BJP Slams Rahul as Findings Contradict Congress Narrative

வாக்குப்பதிவு இயந்திரங்கள்

இந்தச் சூழலில் சித்தராமையா தலைமையிலான கர்நாடகக் காங்கிரஸ் அரசு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்வேயை நடத்தியது. அதில் பொதுமக்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அதிகளவில் நம்பிக்கை வைத்துள்ளது தெரியவந்துள்ளது. ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து கூறி வந்தாலும், மக்கள் அதை ஏற்கவில்லை என்பதையே இந்த சர்வே காட்டுகிறது.

காங்கிரஸ் சர்வே

கர்நாடகாவில் பெங்களூர், பெலகாவி, கலபுரகி, மைசூர் என 102 சட்டசபைத் தொகுதிகளில் 5,100 பேரிடம் இந்த சர்வே எடுக்கப்பட்டது. கர்நாடக அரசின் தலைமைத் தேர்தல் அதிகாரி வி. அன்பு குமார் இந்த சர்வேயை மேற்பார்வையிட்டார்.இந்த சர்வேயில் 83.61% பேர் தாங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்புவதாகக் கூறியுள்ளனர். மேலும், 69.39% பேர் வாக்குப்பதிவு இயந்திரங்களைத் துல்லியமான முடிவுகளை வழங்குகின்றன என்பதை ஏற்றுக் கொண்டனர். அதிலும் 14.22% பேர் வாக்குப்பதிவு இயந்திரங்களை முழுமையாக ஏற்றுக் கொண்டனர்.

விரிவான சர்வே

டிவிஷன் வாரியாக பார்க்கும்போது கலபுரகியில் வசிக்கும் மக்களே வாக்குப்பதிவு இயந்திரங்களில் அதிகபட்ச நம்பிக்கை காட்டியுள்ளனர். அங்கு 83.24% பேர் வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்புகிறார்கள். அதிலும் குறிப்பாக 11.24% பேர் அதை முழுமையாக ஒப்புக்கொண்டனர். அடுத்ததாக மைசூரில் 70.67% பேர் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்பதாகச் சொல்லியுள்ளனர். அதிலும் 17.92% பேர் உறுதியாக ஏற்றுக் கொண்டனர். பெலகாவியில் 63.90% பேர் ஏற்றுக் கொண்டனர்.

கர்நாடக தலைநகர் பெங்களூரில் தான் குறைந்தபட்ச அளவில் இது இருக்கிறது. அங்கு 63% பேர் வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்பும் நிலையில், வெறும் 9.28% பேர் மட்டுமே அதை முழுமையாக நம்புவதாகத் தெரிவித்தனர்.

பாயும் பாஜக

இதற்கிடையே இந்த சர்வே முடிவுகளை வைத்து ராகுல் காந்தியை பாஜக விமர்சித்துள்ளது. இது குறித்து பாஜக கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக் ட்விட்டர் பக்கத்தில், "பல ஆண்டுகளாக, ராகுல் காந்தி இந்தியா முழுவதும் ஒரே கதையைச் சொல்லி வருகிறார்: இந்தியாவின் ஜனநாயகம் 'அபாயத்தில்' உள்ளது, EVMகள் 'நம்பத்தகாதவை', நமது அரசு அமைப்புகளை நம்ப முடியாது எனத் திரும்பத் திரும்ப சொல்கிறார். ஆனால், கர்நாடக மக்களின் சர்வே அதற்கு நேர்மாறாகவே இருக்கிறது. மக்கள் EVMகளை முழுமையாக நம்புவதையே இது காட்டுகிறது

இந்தளவுக்கு மக்கள் தெளிவாக வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்புகிறது. ஆனால், முதல்வர் சித்தராமையா அரசு கர்நாடகாவில் வாக்குச்சீட்டு முறையில் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்துள்ளது. கர்நாடகாவைப் பின்னோக்கி எடுத்துச் செல்ல சித்தராமையா அரசு முடிவு செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி தோல்வி அடையும்போது மட்டுமே இது பற்றி எல்லாம் பேசுகிறது. அதேநேரம் காங்கிரஸ் வெல்லும்போது இவை சரியானதாக மாறிவிடுகிறது.. இது கொள்கை அரசியல் அல்ல. சந்தர்ப்பவாத அரசியல்" என்று சாடினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+