Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிடிவி தினகரனை சந்திக்க விரும்பாத எடப்பாடி.. பொறுப்பை எடுத்த பாஜக.. நயினார் சந்திப்பின் பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணியில் இடம்பெற உள்ள டிடிவி தினகரன் கட்சிக்கும் சேர்த்து தங்களுக்கு தொகுதி பங்கீடு செய்ய அதிமுக உடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளது. ஏற்கனவே டிடிவி தினகரன் உட்பட பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறி இருந்த சூழலில், தற்போது தொகுதி பங்கீடு முடிவடைந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.

அண்மையில் அமமுக பொதுக்குழு கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசுகையில், தேர்தல் களத்தில் எதிரி, துரோகி என்று பார்க்க கூடாது. மக்கள் நலனே முக்கியம் என்று பேசி இருந்தார். கடந்த 3 மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று கடுமையாக விமர்சித்து வந்த டிடிவி தினகரன், திடீரென யூடர்ன் போட்டது அமமுகவினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

AIADMK vs BJP

இதனிடையே எடப்பாடி பழனிசாமியும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது அமமுகவை என்டிஏ கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோர் அதிமுகவில் சேர்க்கப்பட மாட்டார்கள். இதனை எத்தனை முறை சொல்வது என்று கூறினார்.

ஆனால் டிடிவி தினகரன் கூட்டணியில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் உட்பட பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். இதன் மூலமாக என்டிஏ கூட்டணியில் டிடிவி தினகரன் இணைக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதி என்று பார்க்கப்படுகிறது. அதிமுகவில் இருந்து விலகி சென்ற டிடிவி தினகரன், தனியாக அமமுக என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

இதனால் தன்னுடைய நாற்காலிக்கு எந்த சிக்கலில் இல்லை என்பதாலேயே எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதனாலேயே ஓபிஎஸ் மற்றும் சசிகலாவை எதிர்க்கும் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனை சேர்ப்பதில் எந்த பிடிவாதமும் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் டிடிவி தினகரனை சந்திக்க எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை.

இதன் காரணமாக அமமுகவுக்காக பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பையும் பாஜகவே கையில் எடுத்துக் கொண்டது. அமித்ஷா தரப்பில் கேட்கப்பட்ட 56 தொகுதிகளை டிடிவி தினகரனின் அமமுக மற்றும் ஏசி சண்முகத்தின் புதிய நீதி கட்சி, ஜான் பாண்டியன் தரப்பு ஆகியவற்றுக்கு பாஜகவே பிரித்து கொடுக்கும் என்று தெரிகிறது. இதனால் பாஜக குறைந்தது 36 தொகுதிகள் வரை போட்டியிடலாம் என்று கருதப்படுகிறது. நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி சந்திப்புக்கான காரணமும் இதுதான் என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+