ஒரு மனுஷனுக்கு எவ்வளவு சோதனை.. ஓபிஎஸ் அணியில் மீண்டும் விக்கெட்! திமுகவுக்கு தாவிய டெல்டா பிரபலம்!
சென்னை: டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்ட வேதாரண்யம் பிகேவி பிரபு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட பின்னர், ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்த அவர், தற்போது திமுகவில் ஐக்கியமாகியுள்ளார். மனோஜ் பாண்டியன் மூலம் இந்த இணைப்பு நடந்ததாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசியல் களம் இப்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதற்காக திமுக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடலை தொடங்கிவிட்டது. குறிப்பாக 2023ஆம் ஆண்டின் இறுதியில், 2026 தேர்தலை குறிவைத்து தேர்தல் பணிக்குழுவை திமுக அமைத்தது.
கே.என். நேரு தலைமையிலான இந்த குழுவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த முறை திமுகவுக்கு தேர்தல் பணிகள் சற்று எளிதாக இருப்பதாகவே அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

திமுக கூட்டணி
காரணம், கடந்த தேர்தல்களைப் போல கடைசி நேர கூட்டணி குழப்பங்கள் இப்போதைக்கு இல்லை. ஏற்கனவே திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக இருப்பதால், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை மட்டுமே முக்கியமாக இருக்கும் நிலை உள்ளது. அதே நேரத்தில், எதிரணியில் உள்ள அ.தி.மு.க., திமுகவை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வந்தாலும், உட்கட்சி பிரச்சனைகளால் தொடர்ந்து சிக்கி வருகிறது. இந்த சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திமுக முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
திமுக தாவல்
குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை திமுகவுக்கு அழைத்து வரும் பணிகள் வேகமெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு பகுதியாக, ஏற்கனவே அன்வர்ராஜா, மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், மைத்ரேயன், சுப்புரத்தினம் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவில் இணைந்தால் 2026 தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு, கட்சியில் உரிய பதவி, தேவையெனில் அமைச்சரவையிலும் இடம் வழங்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பிகேவி பிரபு
இதற்கான முன்னுதாரணமாக, முன்பு அ.தி.மு.க.வில் இருந்து திமுகவுக்கு வந்த சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, முத்துச்சாமி உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதும், செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்டோருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டதையும் திமுக தரப்பு சுட்டிக்காட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்த பின்னணியில்தான், டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க.வின் முக்கிய அடையாளமாக இருந்த வேதாரண்யம் பிகேவி பிரபு, உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்
அவரது தாத்தா வெங்கடாசலம், காங்கிரஸ் கட்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில துணைத் தலைவராகவும் இருந்தவர். பிகேவி பிரபு, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ். அணி) மாநில அமைப்புச் செயலாளராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்த நிலையில், தற்போது பிகேவி பிரபுவின் இணைப்பு ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
கட்சி தாவல்கள்
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த பிறகு, அவரது மூலமாக ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை திமுக தட்டி தூக்கும் முயற்சி நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகவே இந்த இணைப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதத்தில் மட்டும் இதுவரை இரண்டு ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்திருப்பது, அடுத்தடுத்து மேலும் கட்சி தாவல்கள் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பை அரசியல் வட்டாரங்களில் உருவாக்கியுள்ளது.
-
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications