Jana Nayagan: ஜனநாயகன் பட வழக்கு நாளை ஒத்தி வைப்பு! U/A சான்றை ஏற்க மறுத்து தயாரிப்பு நிறுவனம் வழக்கு
சென்னை: "ஜனநாயகன்" திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரி தயாரிப்பு நிறுவனமான கேவிஎன், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்த வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்ட நிலையில் அதை ஏற்க படக் குழு யு சான்றிதழ் கோரியதை அடுத்து இந்த வழக்கு நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம் வரும் 9ஆம் தேதி உலகெங்கும் திரையிடப்படுகிறது. இந்த படத்தில் விஜய்யுடன் மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இந்த படம் , பாலையா (எ) பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தின் காப்பி என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்த நிலையில் இந்த படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை என சொல்லப்பட்டு வந்தது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் (KVN Productions) சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்துள்ளது. அந்த வழக்கில் "ஜனநாயகன் படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ளன.
எனினும் தணிக்கை சான்றிதழ் கொடுக்கவில்லை. படத்தை தணிக்கை செய்வதற்காக கடந்த மாதம் தணிக்கை குழுவுக்கு அனுப்பினோம். டிசம்பர் 19ஆம் தேதி ஜனநாயகன் படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் சொன்ன மாற்றங்களை செய்து மறுதணிக்கைக்கு அனுப்பப்பட்டது. ஆனாலும் இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மதியம் 2.15 மணிக்கு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்படுவதாக தணிக்கை குழு தெரிவித்தது. ஆனால் இதை ஏற்க மறுத்த தயாரிப்பு நிறுவனம் யு சான்றிதழ் கோரியது. ஆனால் இந்த படத்தில் அதிக அளவு வன்முறை காட்சிகள், மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் உள்ளதால் யு சான்றிதழ் வழங்க முடியாது என தணிக்கை குழு தெரிவித்தது. இதை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
இந்த படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் இந்த வழக்கு நாளை ஒத்தி வைப்பால் படம் திட்டமிட்டபடி ஜனவரி 9ஆம் தேதி வெளியாகுமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications