Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்கள் வீட்டில் 2004க்கு பின்.. பிறந்தவர்கள் இருக்கிறார்களா? SIR செய்வதில் உள்ள பெரிய சிக்கல்! கவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் நடக்கும் வாக்காளர் சிறப்பு தீவிர மறுஆய்வு திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட வயது கொண்டவர்கள், குறிப்பிட்ட வருடங்களில் பிறந்தவர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது இல்லை.

தற்போதைய சிறப்பு தீவிர மறுஆய்வு (SIR) விதிகளின்படி, வாக்காளர் பதிவுக்கான நடைமுறைகள், குறிப்பாக அடையாளச் சான்றுகள் தொடர்பாக, பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஒருவேளை நீங்களோ அல்லது உங்கள் பெற்றோரோ 2002 SIR பட்டியலில் இடம்பெறவில்லை என்றால், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 13 அடையாள ஆவணங்களில் ஒன்றைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். பிறந்த தேதியின் அடிப்படையில் ஆவணச் சான்றுகள் மாறுபடும்.

ஆனால் அதே சமயம் உங்கள் பெயரோ அல்லது உங்கள் பெற்றோரின் பெயரோ 2002 ஆம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்தப் (SIR) பட்டியலில் இருந்தால், வாக்காளர் பதிவு படிவத்தை நிரப்ப துணை ஆவணங்கள் தேவையில்லை. தேவையான விவரங்களை மட்டும் பூர்த்தி செய்தால் போதுமானது. ஏனென்றால் அப்போதே உங்கள் பெயர் இடம் பெற்று இருக்கும்.

பிறப்பு அடிப்படையில் மாறும்

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதிக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு, உங்கள் அடையாளம் மற்றும் இரண்டு பெற்றோரின் அடையாளங்களையும் உறுதிப்படுத்தும் ஆவணங்கள் கட்டாயம் தேவை. இவை தேர்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ள ஆவணங்களாக இருக்க வேண்டும்.

1987 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதிக்கும் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதிக்கும் இடையில் பிறந்தவர்கள், தங்கள் சொந்த அடையாளத்தையும் ஒரு பெற்றோரின் அடையாளத்தையும் நிரூபிக்கும் ஆவணங்களை வழங்க வேண்டும். இவை இரண்டும் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.

1987 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதிக்கு முன் பிறந்தவர்கள், 2002 SIR பட்டியலில் இல்லாவிட்டால், வாக்காளர் பதிவு செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட 13 ஆவணங்களில் எதையாவது ஒன்றை சமர்ப்பிக்கலாம். இந்த ஆவண விதிகளைப் பின்பற்றி வாக்காளர் படிவத்தை பூர்த்தி செய்தால், உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுவது உறுதி.

SIR Special Intensive Revision may be very difficult for the people born after 2004

சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) என்பது என்ன?

இந்திய தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்ட SIR, குறிப்பிட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பிக்க, வீடு வீடாகச் சென்று சரிபார்த்துத் திருத்தும் ஒரு விரிவான திட்டமாகும். இது வழக்கமான வருடாந்திர அல்லது சுருக்கத் திருத்தங்களிலிருந்து வேறுபட்டது. ஒவ்வொரு தகுதியான குடிமகனும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதிசெய்யும் கால வரையறைக்குட்பட்ட, தீவிரமான செயலாகும்.

மேலும், இறந்தவர்கள் அல்லது இடம் பெயர்ந்தவர்கள் போன்ற இரட்டைப் பதிவுகளை இத்திட்டம் நீக்கும். தற்போதுள்ள வாக்காளர் பட்டியல்கள் காலாவதியாகிவிட்டாலோ, பிழைகள் இருந்தாலோ அல்லது ஏதேனும் ஒரு முக்கிய தேர்தலுக்கு முன்னதாகவோ SIR செயல்முறை தொடங்கும் என்று ECI தெரிவித்துள்ளது.

SIR 2.0 வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படும் 13 ஆவணங்கள்:

SIR 2.0 சரிபார்ப்புச் செயல்பாட்டின்போது அடையாளச் சான்று, வயதுச் சான்று அல்லது இருப்பிடச் சான்றாகப் பயன்படுத்தக்கூடிய 13 ஆவணங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

  • அவை, மத்திய/மாநில அரசு அல்லது பொதுத்துறை நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட அடையாள அட்டை அல்லது ஓய்வூதியப் பண ஆணை
  • உள்ளூர் அதிகாரி, வங்கி, அஞ்சல் அலுவலகம், LIC அல்லது பொதுத்துறை நிறுவனத்திடமிருந்து ஜூலை 1, 1987க்கு முன் வழங்கப்பட்ட அரசு அடையாள அட்டை, சான்றிதழ் அல்லது ஆவணம், உரிய அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்
  • இந்திய அரசால் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்
  • அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தின் மெட்ரிகுலேஷன் அல்லது கல்விச் சான்றிதழ்,
  • மாநில அதிகாரியால் வழங்கப்பட்ட நிரந்தர வசிப்பிடச் சான்றிதழ்,
  • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட வன உரிமைச் சான்றிதழ், உரிய அதிகாரியால் வழங்கப்பட்ட OBC/SC/ST அல்லது சாதிச் சான்றிதழ்,
  • பொருந்தும் இடங்களில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) இருந்து எடுக்கப்பட்ட பதிவு,
  • மாநில அல்லது உள்ளூர் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவு,
  • அரசால் வழங்கப்பட்ட நிலம்
  • வீட்டு ஒதுக்கீட்டுச் சான்றிதழ்,
  • ஆதார் அட்டை (அடையாளச் சான்றாக மட்டுமே, குடியுரிமைக்கு அல்ல)

ஆதார் மட்டும் போதுமான ஆதாரமாகாது . குடியுரிமை அல்லது வயதை நிரூபிக்க ஆதார் அட்டை மட்டும் போதுமானதல்ல என்று இந்திய தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. SIR 2.0-க்கு ஆதார் அட்டையைச் சமர்ப்பிக்கும் வாக்காளர்கள், தேவைப்பட்டால் சரிபார்ப்புக்கு வேறு தகுதியான ஆவணத்தையும் இணைக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+