அரசியல் கூட்டங்களுக்கு 5 நாட்களுக்கு முன்னதாக அனுமதி! புதிதாக நெறிமுறைகளை உருவாக்கியது தமிழக அரசு
சென்னை: அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ரோடு உள்ளிட்ட பிரச்சாரங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம் தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்டது. இதில் புதிதாக வழிகாட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
அதன்படி அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவதற்கு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்னர் அனுமதி வழங்கப்படும். கூட்டங்கள், பேரணிகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வைப்புத் தொகை வசூலிக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் மட்டுமே பொதுமக்கள் காத்திருக்க அனுமதியளிக்கப்படும். பொதுக்கூட்டங்கள், பேரணிகள் என அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதியளிக்கப்படும்.

இதில் மேலும் சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, அரசியல் கூட்டங்களில் 5,000 முதல் 10,000 பேர் வரை கலந்து கொள்ளும் கூட்டம் என்றால் ரூ. 1 லட்சம் வரையும், 10,000 முதல் 20,000 பேர் வரை கலந்து கொள்ளும் ளும் கூட்டம் என்றால் ரூ.3 லட்சம், 20,000 முதல் 50,000 பேர் வரை கலந்து கொள்ளும் கூட்டம் என்றால் ரூ.8 லட்சம், 50,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் கூட்டம் என்றால் ரூ.20 லட்சம் என வைப்புத்தொகை வசூலிக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
ரோடு-ஷோவுக்கான நிபந்தனைகளை பொறுத்தவரை, பேச்சாளருக்கு 500 அடி தூரம் முன்புவரை தடுப்பு; தடுப்புகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அமைக்க வேண்டும். போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடத்த வேண்டும்; பேச்சாளரை மக்கள் பின் தொடர்வதை தடுக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே உரை நிகழ்த்த வேண்டும். ரோடு-ஷோ செல்லும் வழியில் வேறு எங்கு உரை நிகழ்த்தக் கூடாது என்றும் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
-
தவெக வேட்பாளர்களை அறிவித்த சில நிமிடங்களில் விஜய்க்கு அதிர்ச்சி.. பறக்கும் படை அதிகாரிகள் ரெய்டு -
விஜயை வீழ்த்தினால் அமைச்சர் பதவி கன்பார்ம்.. ஜெயிண்ட் கில்லர் "இனிகோ".. ஸ்டாலின் திருச்சி சர்ப்ரைஸ் -
தவெக-வில் சேர்ந்த 3 நாளில் எம்.எல்.ஏ சீட் கொடுத்த விஜய்.. உதயநிதி தொகுதியில் களமிறங்கும் செல்வம்! -
ஸ்டாலினுக்கு எதிராக கொளத்தூரில் விஜய் டிக் அடித்த அந்த பழைய முகம்! திமுக வளர்த்தெடுத்த புள்ளி! யார்? -
"நேர்காணல் கூட இல்லை.." விஜய் வேட்பாளர்களை அறிவிக்கும் போதே போராட்டத்தில் இறங்கிய தவெகவினர் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்! -
"மகளிருக்கு ஜாக்பாட்".. ரூ.8,000 கூப்பன் உள்பட பெண்களுக்கு திமுக தந்த டாப் 14 அறிவிப்புகள் – லிஸ்ட் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
மார்ச் 30ல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்! முதல்வரின் கொளத்தூர் தொகுதி உட்பட.. 3 தொகுதிகளுக்கு அனுமதி -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம்? - விஜய்க்கு மா.சுப்பிரமணியன் கேள்வி











Click it and Unblock the Notifications