தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு.. சென்னையில் படுமோசம்! வெளியான அதிர்ச்சி தகவல்
சென்னை: தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது என்றும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2025 ஆம் ஆண்டு பாதிப்பு அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே ஆண்டில் புற்றுநோய் பாதிப்பு ஒரு லட்சம் எண்ணிக்கையை தாண்டி அதிரவைத்துள்ளது. இதிலும் தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை, காஞ்சிபுரத்தில் புற்றுநோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த தரவுகளின்படி, தமிழகத்தில் தற்போது 1,00,097 பேருக்கு புதிதாக புற்று நோய் பாதிப்பு பதிவாகியுள்ளன.

பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு
பாதிப்பு எண்ணிக்கையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது, நோய் தடுப்பு நடவடிக்கைகள், ஆரம்ப கட்ட கண்டறிதல் மற்றும் சிகிச்சை வசதிகளின் திறன் குறித்து சுகாதாரத் துறையினரிடையே கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
புற்று நோய் பாதிப்பை கண்டறிய வலுவான பரிசோதனைத் திட்டம் மற்றும் மக்களின் வாழ்க்கைமுறை மாற்றங்களும் அமல்படுத்தப்படாவிட்டால், வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னையில் அதிகம்
கடந்த 2020 ஆம் ஆண்டில் 68,750 ஆக இருந்த புற்று நோய் பாதிப்பு பதிவானது, 2021 ஆம் ஆண்டில் 76,968 ஆகவும், 2022 ஆம் ஆண்டில் 89,265 ஆகவும், 2023 ஆம் ஆண்டில் 92,816 ஆகவும், 2024 ஆம் ஆண்டில் 96,486 ஆகவும் உயர்ந்த நிலையில், இந்த ஆண்டு ஒரு லட்சம் எண்ணிக்கையை கடந்துள்ளது.
புற்று நோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது நோய்ப் பாதிப்பையும், மாவட்டங்கள் முழுவதும் ஒருங்கிணைந்த பொது சுகாதார நடவடிக்கைகளின் அவசரத் தேவையையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 8,505 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
ஆண்களுக்கு வாய் புற்றுநோய்
அதற்கு அடுத்த இடத்தில் காஞ்சிபுரத்தில் 7,295 பேருக்கு பாதிப்பு தெரியவந்துள்ளது, வேலூர் 6,525 பேருக்கும் பதிவாகியுள்ளது. நகர்ப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் பதிவாக மக்களின் வாழ்க்கை முறை, மாசுபாடு, மன அழுத்தம் மற்றும் தாமதமான கண்டறிதல் ஆகியவையே காரணமாக இருப்பதாகவும் சுகாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்களுக்கு வாய்ப் புற்றுநோய் அதிக எண்ணிக்கையில் பதிவாவதாகவும் குட்கா, புகையிலை பொருட்கள் பயன்பாடே இதற்கு பெரும்பாலும் காரணமாக உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில், பெருங்குடல் மற்றும் வயிற்றுப் புற்றுநோய்கள் உள்ளன.
பெண்களுக்கு மார்பக, கருப்பை புற்றுநோய்
பெண்களுக்கு இடையே மார்பக புற்று நோய், கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஆகியவை அதிக அளவில் பதிவாகியிருப்பதாகவும் தீவிர விழிப்புணர்வு மற்றும் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டியதன் தேவையை இது சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுவதாகவும் இதனால், உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் குறைவதோடு, சிகிச்சை செலவுகள் அதிகரிப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
நெல்லையில் 18 பேரில் ஒருவருக்கு..
நெல்லை மாவட்டத்தினை பொறுத்த அளவில் 18 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக நெல்லை கேன்சர் சென்டர் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். நெல்லையில் புற்றுநோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2018 ஆம் ஆண்டில் 2,537 ஆக இருந்த நிலையில் கடந்த 2019-இல் 2977 ஆக அதிகரித்துள்ளது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலமாக புற்றுநோயை முற்றிலும் தடுக்க முடியும் என மருத்துவ குழுவினர் தெரிவிக்கின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications