38 நாட்களுக்கு பின்.. கரூரில் உயிரிழந்த 41 பேருக்கு அஞ்சலி செலுத்திய விஜய்!
சென்னை: தவெகவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கும் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக கரூர் சம்பவம் அரங்கேறி 38 நாட்களுக்கு பின், முதல்முறையாக உயிரிழந்த 41 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதன்பின் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு சென்னை வந்த விஜய், 3 நாட்களுக்கு பின் வீடியோ ஒன்றை வெளியிட்டு, முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விடுத்தார். அதேபோல் கரூர் சம்பவத்திற்கு பின் தவெக நிர்வாகிகள் அத்தனை பேரும் தலைமறைவாகினர்.

கரூர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய போதும் கூட, தவெகவில் பெரிய நடவடிக்கைகள் இல்லை. கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சந்திக்க கூட வரவில்லை. அவர்களுக்காக ஒரு மெழுகுவர்த்தியை ஏந்தி கூட அஞ்சலி கூட்டம் நடத்தப்படவில்லை. இறுதியாக 30 நாட்களுக்கு பின் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களை மாமல்லபுரத்திற்கு விஜய் அழைத்தார்.
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த விஜய், அவர்களுக்கு ஆறுதல் கூறி பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார். இதன்பின் அரசியல் பணிகளில் தீவிரம் காட்டிய விஜய், தவெகவின் சிறப்பு பொதுக்குழுவை கூட்டி இருக்கிறார். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இந்த பொதுக்குழு கூட்டம் தொடங்கி இருக்கிறது.
இந்த சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் இருந்து 2 ஆயிரம் பேர் வந்துள்ளனர். பொதுக்குழு கூட்டத்திற்காக கடிதம், அடையாள அட்டை இல்லாமல் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதன்பின் தவெக தலைவர் விஜய் பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தார். அதன்பின் அனைவரும் எழுந்து நின்று கரூர் கூட்டத்தில் உயிரிழந்த 41 பேருக்கும் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர்.
கரூர் சம்பவத்திற்கு பின் தவெக சார்பாக நடத்தப்பட்ட முதல் அஞ்சலி கூட்டமாகவும் இந்த பொதுக்குழு கூட்டம் அமைந்துள்ளது. 38 நாட்களுக்கு பின் விஜய் கரூரில் உயிரிழந்த 41 பேருக்கும் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். அதேபோல் 38 நாட்களுக்கு பின் விஜய் முதல்முறையாக பொதுவெளிக்கு வந்துள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.
-
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
பெண்களுக்காக புகார் கொடுக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? உங்களுக்கு போட்டியே நான் தான்! ஜூலியின் புது வீடியோ -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை!












Click it and Unblock the Notifications