பீகாரில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் அலறியடித்து ஓட்டம்
பாட்னா: பீகாரில் வியாழக்கிழமை இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களுக்கு ஓடி வந்தனர்.
நேபாள் மற்றும் இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ள பீகார் மாவட்டங்களை மையமாகக் கொண்டு வியாழக்கிழமை இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியிருந்தது.
பாட்னா, தர்பங்கா, அராரியா, முங்கர், சுபுவால் மற்றும் மதுபானி உள்ளிட்ட இடங்களில் இரவு 9.02 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தது. வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களுக்கு ஓடி வந்தனர்.
நேபாளத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். முன்பும் கூட அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டபோது அது பீகாரின் தர்பங்கா, மதுபானி உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது.
இது குறித்து பீகார் மாநில வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஏ.கே. சென் கூறுகையில்,
நிலநடுக்கத்தால் பீகாரில் எந்தவித சேதமும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. மக்கள் தான் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர் என்றார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications