ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: பிப்ரவரி 2 முதல் சுப்ரீம் கோர்ட்டில் தினசரி விசாரணை
டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி 2ம் தேதி முதல் ஆரம்பிக்கும் என்றும், அதற்கு முன்பாக, விசாரிக்க வேண்டிய அம்சங்களை மனுதாரர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக ஹைகோர்ட்டில் செய்த மேல்முறையீட்டின்போது, தனிக்கோர்ட்டு தீர்ப்பை நீதிபதி குமாரசாமி ரத்து செய்ததுடன், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.

இதனை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்கும் விசாரணை நீதிபதிகளில் ஒருவரான ஆர்.கே.அகர்வால் திடீரென மாற்றம் செய்யப்பட்டார்.
நீதிபதி ஆர்.கே அகர்வாலுக்கு பதிலாக அமித்வா ராய் விசாரிப்பார் என்று தெரிவிக்கப்படுள்ளது. அதேநேரம், பெஞ்சின் மற்றொரு நீதிபதியான பினாகி சந்திரகோஷ் அதே பொறுப்பில் தொடருகிறார்.
இந்நிலையில், சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கு இன்று, நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, "வழக்கை தினமும் விசாரிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்பது பற்றி பிற வழக்குகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். பிப்ரவரி 2ம் தேதி முதல் 4ம் தேதிவரை இவ்வழக்கு முக்கியத்துவம் கொடுத்து தினசரி விசாரிக்கப்படும். அதன்பிறகு, வழக்குகளின் நிலைமைக்குதக்கபடி விசாரணை நடைபெறும்.
வழக்கில் எந்தெந்த முக்கிய அம்சங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பது குறித்த விவரத்தை வரும் பிப்ரவரி 2ம் தேதிக்கு முன்பாக கோர்ட்டில் மனுதாரர்கள் தாக்கல் செய்ய வேண்டும்" என்று நீதிபதிகள் அறிவித்து, வழக்கை பிப்ரவரி 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதற்கு முன்பாக அப்பீல் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி பினாகி சந்திரகோஷ் கூறுகையில், "சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் 18 ஆண்டுகள் நடந்துள்ளது. சுப்ரீம்கோர்ட் என்பது விசாரணை நீதிமன்றம் கிடையாது. எனவே எந்தெந்த அம்சங்களை விசாரிக்க வேண்டும் என்பது குறித்து குறிப்பிட்டால், அந்த அம்சங்களை விசாரித்து, குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்தது, சரிதானா அல்லது தவறுதானா என்பது குறித்து தீர்ப்பளிக்க முடியும்" என்று தெரிவித்திருந்தார்.
எனவேதான், பிப்ரவரி 2ம் தேதிக்கு முன்பாக விசாரிக்க வேண்டிய அம்சங்களை தாக்கல் செய்யுமாறு மனுதாரர்களுக்கு நீதிபதிகள் தற்போது உத்தரவிட்டுள்ளனர். கர்நாடக அரசு, அன்பழகன், ஜெயலலிதா உள்ளிட்ட தரப்புகள் தங்கள் மனுக்களை பிப்ரவரி 2ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கு இறுதி விசாரணை பிப்ரவரி முதல் தொடங்க உள்ளது, அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
என்னுடைய சகோதரருக்கே போன் போட்டு என் உத்தரவு பற்றி கேள்வி எழுப்புவதா? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கோபம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications