தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!
சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2005ல் தேமுதிக கட்சி தொடங்கப்பட்டது முதல் அந்தக் கட்சி இப்போதுதான் மிகக் குறைந்த சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதுவரை தேமுதிக, சட்டசபை தேர்தல்களில் எத்தனை இடங்களில் போட்டியிட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நாள் நெருங்குவதால் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, சசிகலா - ராமதாஸ் கூட்டணி என 5 முனைப் போட்டி நிலவுவதால், ஒவ்வொரு வாக்கு வங்கியும் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.

தேமுதிகவுக்கு 10 சீட்
இந்நிலையில், தமிழக அரசியல் வரலாற்றில் சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜயகாந்த் உருவாக்கிய கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்த நிலையில், இன்று தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளது.
ஏற்கனவே தேமுதிக பொருளாளர் சுதீஷுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டு அவர் எம்.பி ஆகிவிட்டார். இந்நிலையில் தேமுதிகவுக்கு 10 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேமுதிக தங்களது சொந்த சின்னமான முரசு சின்னத்திலேயே போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, சுமார் 21.4 சதவீத வாக்குகளை அந்தத் தொகுதிகளில் பெற்று தனது இருப்பை உறுதி செய்தது. விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டார்.
2006 சட்டசபை தேர்தல்
2006 சட்டமன்றத் தேர்தலில் முதல் முதலில் களம் கண்டது தேமுதிக. தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிட்டது. 232 தொகுதிகளில் முரசு சின்னத்திலும் 2 தொகுதிகளில் மோதிரம் சின்னத்திலும் போட்டியிட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மட்டுமே இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். எனினும், பல தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தனர்.
2011 சட்டசபை தேர்தல்
2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டது தேமுதிக. இதில் 29 இடங்களில் வெற்றி பெற்றது தேமுதிக. இதன் மூலம் விஜயகாந்த் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.
2016 சட்டசபை தேர்தல்
2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் 104 தொகுதிகளில் போட்டியிட்டது தேமுதிக. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.
2021 சட்டசபை தேர்தல்
2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக உடன் கூட்டணி அமைத்து 60 தொகுதிகளில் போட்டியிட்டது தேமுதிக. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் தற்போது, திமுக உடன் கூட்டணி அமைத்து 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது தேமுதிக. கடந்த 21 ஆண்டுகளில், சட்டசபை தேர்தல்களில் மிகக் குறைவான சீட் எண்ணிக்கையில் தேமுதிக இப்போதுதான் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுக கூட்டணி ஓவர்! முற்போக்கு பிராண்டிங்கை தட்டிப்பறித்த விஜய்! அறிவாலயத்தை அலறவிடும் புது அஸ்திரம் -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்!












Click it and Unblock the Notifications