"ரூ.150 கோடிக்கு எல்.டி.டி.இ அணு குண்டு மூலப் பொருள் : பெங்களூருவில் 'சதுரங்க வேட்டை' கோஷ்டி கைது!
பெங்களூரு: அணு குண்டு தயாரிப்பதற்காக விடுதலை புலிகள் இயக்கம் வைத்திருந்த சிவப்பு பாதரசம் என்று பொய் சொல்லி சாதாரண கல்லை ரூ.150 கோடிக்கு விலைபேசிய பலே மோசடிக்காரர்கள் மூவரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவில் ஒரு கும்பல், சிவப்பு பாதரசம் என்ற பெயரில் ஒரு பொருளை விற்பனை செய்ய முயலுவதாக நகர குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மோசடி நபர்களை கையும், களவுமாக பிடிக்கும் நோக்கத்தில், மாறுவேடத்தில்,, வாடிக்கையாளரை போல அந்த மூன்று பேரையும் அணுகினர் போலீசார்.

அப்போது, அந்த நபர்கள் கூறிய தகவல் போலீசாருக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. இலங்கையில் விடுதலை புலிகள் இயக்கம், அணு குண்டை தயாரிக்க சோவியத் ரஷ்யாவிடமிருந்து குறிப்பிட்ட மூலப்பொருளை வாங்கியதாகவும், இயக்க தலைவர் பிரபாகரன் இறந்த பிறகு புலிகளில் ஒருவர் அதை இந்தியா கொண்டு வந்ததாகவும், அந்த மூலப்பொருள்தான் சிவப்பு பாதரசம் என்றும், அது தங்களிடமுள்ளதாகவும் அந்த நபர்கள் கூறியுள்ளனர்.
மூலப்பொருளை காண்பிக்குமாறு மஃப்டி போலீசார் கேட்டபோது, 5 லட்சம் ரூபாய் பணத்தை முன்பணமாக தந்தால் மட்டுமே மூலப்பொருளை காண்பிக்க முடியும் என்றும் போலீசார் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களாக நடித்த போலீசார், ரூ.5 லட்சத்தை கொடுத்துள்ளனர்.

இதையடுத்து ஒரு சிலிண்டருக்குள் கல் போன காணப்பட்ட ஒரு பொருளை காண்பித்து, இதுதான் அந்த மூலப்பொருள் என்று மோசடி நபர்கள் கூறியதுடன், அது அணு ஆயுத தயாரிப்புக்குரிய மூலப்பொருள்தான் என்பதாக அமெரிக்க ஆய்வகம் ஒன்று அளித்த போலி சான்றிதழையும் மஃப்டி போலீசாரிடம் காட்டியுள்ளனர், அந்த ஆசாமிகள்.
இதைத் தொடர்ந்து கையும் களவுமாக மூவரையும் போலீசார் கைது செய்தனர். அணு ஆய்வு துறையிடம் கொடுத்து ஆய்வு செய்ததில் மோசடி நபர்கள் கூறியது போல அது அணு ஆயுத மூலப்பொருள் இல்லை, வீடு கட்ட பயன்படுத்தப்படும் ஹாலோபிளாக் வகை கல் என்பது தெரியவந்துள்ளது. விடுதலை புலிகள் பெயரை அணு ஆ.யுதத்தோடு தொடர்பு படுத்தி ரூ.150 கோடியை அபேஸ் செய்ய முயன்ற அந்த பலே நபர்கள் இப்போது போலீஸ் வசமுள்ளனர். அவர்களிடமிருந்து லேப்டாப் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications