நான் ஒன்றும் உதவியற்றவள் இல்லை, செல்வாக்கு மிக்கவள்: அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்
டெல்லி: நான் ஒன்றும் எதையும் செய்ய முடியாதவள் இல்லை. மாறாக மிகவும் செல்வாக்கு வாய்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளது வெளியுறவுத் துறை அமைச்சரின் எதையும் செய்ய முடியாத நிலையை காண்பிக்கிறது. ஒபாமா இந்தியா வந்தபோது வெளியுறவுத் துறை அமைச்சரை மேடையில் கூட அமரவிடவில்லை என ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

சுக்லாவின் பேச்சுக்கு பதில் அளித்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில்,
நான் ஒன்றும் எதையும் செய்ய முடியாதவள் இல்லை. நான் செல்வாக்குமிக்க வெளியுறவுத் துறை அமைச்சர். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்தியா வந்தபோது நான் பிரதமர் அருகே அமர்திருந்தேன். நீங்கள் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கலாம்.
நான் இலங்கை சென்றபோது தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றி பேசினேன். இவ்வாறு கூறுவது சரியில்லை என்று இலங்கை பிரதமர் விக்ரமசிங்கேவிடம் தெரிவித்தேன். மீனவர் பிரச்சனை பற்றி தீவிரமாக கண்காணித்து வருகிறோம். நான் இலங்கை பிரதமருடன் பேசியது கேமராவில் பதிவாகியுள்ளது. அவரின் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
எங்களின் கண்டனத்திற்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை. நாம் கூறியதை அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்பதையே அவர்களின் மௌனம் தெரிவிக்கிறது.
பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரு இந்திய மீனவர் கூட இலங்கை கடற்படையினரால் கொல்லப்படவில்லை என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா அல்லது இலங்கையில் எந்த மீனவரும் கைதாவதோ, சிறை பிடிக்கப்படுவதோ இல்லாத நிலை ஏற்படும் என்றார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications