Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொத்துக்குவிப்பு வழக்கில் அப்பீல்: ஜெ. முதல்வர் பதவி தப்புமா? சட்டம் சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மேல்முறையீடு செய்வதன் மூலம், தமிழக முதல்வர் பதவியில் இருந்து ஜெயலலிதா நீக்கப்படுவாரா, அவரது அரசியல் எதிர்காலம் என்ன ஆகும் என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

19 வருடங்கள் நடைபெற்ற சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, 4 ஆண்டு சிறை தண்டனையும், விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து பெங்களூர் மத்திய சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார்.

21 நாள் சிறைவாசம்

21 நாள் சிறைவாசம்

ஹைகோர்ட் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில், தலைமை நீதிபதி தத்து அமர்வு, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியது. 21 நாள் சிறைவாசத்துக்கு பிறகு ஜெயலலிதா சென்னை திரும்பினார்.

முதல்வரானார்

முதல்வரானார்

இந்நிலையில், குமாரசாமி தலைமையிலான, ஹைகோர்ட் அமர்வு, ஜெயலலிதா அப்பீல் மனுவை விசாரித்து வந்தது. இந்த வழக்கில் கடந்த மாதம் 11ம் தேதி தீர்ப்பளித்த கர்நாடக ஹைகோர்ட் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் விடுதலை செய்தது. இதையடுத்து மே 23ம் தேதி, ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்றார்.

நெருக்கடி

நெருக்கடி

இதனிடையே ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார், அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோரும் கர்நாடக அரசை வலியுறுத்தி வந்தனர்.

மேல்முறையீடு

மேல்முறையீடு

இந்நிலையில், முதல்வர் சித்தராமையா தலைமையில், தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டின்போதும், அரசு சிறப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா மற்றும் அவரது டீம் களமிறங்க உள்ளது.

ஆலோசனைகள்

ஆலோசனைகள்

மேல்முறையீடு முடிவை எடுக்கும் முன்பு, கர்நாடக அரசு பல சுற்று ஆலோசனைகளை நடத்தியது. தற்போது ஜெயலலிதா முதல்வராக இருப்பதால், மேல்முறையீடு செய்ய ஆளுநரின் அனுமதி வேண்டுமா மற்றும், மேல்முறையீட்டின்போது அரசு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதியை பெற வேண்டுமா ஆகிய இரு சந்தேகங்களை கர்நாடக சட்டத்துறை அமைச்சகம், அதன் தலைமை வழக்கறிஞர் ரவிவர்மகுமாரிடம் கேட்டிருந்தது.

உடனே மேல்முறையீடு

உடனே மேல்முறையீடு

அவர் கடந்த வெள்ளிக்கிழமை அரசுக்கு அளித்த அறிக்கையில், ஜெயலலிதா மீதான மேல்முறையீட்டுக்கு ஆளுநர் அனுமதி தேவையில்லை, மேலும், சிறப்பு வழக்கறிஞரை கர்நாடகாவே தன்னிச்சையாக நியமிக்க சட்டத்தில் இடமுள்ளது என்று தெளிவுபடுத்தியிருந்தார். மேலும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யாவிட்டால், உச்சநீதிமன்றம் கர்நாடகா மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு துரோகம் இழைத்தது போலாகிவிடும் என்றும், நீதியை கேலிக்கூத்தாகுவதை போலாகிவிடும் என்றும் எச்சரித்திருந்தார். எனவே உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று ரவிவர்மகுமார் கேட்டுக் கொண்டார். எனவே கர்நாடக அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது.

இவ்வாரத்தில்

இவ்வாரத்தில்

இவ்வழக்கில் தீர்ப்பு வெளியாகி 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய சட்டத்தில் இடமுள்ளது. தற்போது தீர்ப்பு வந்து 20 நாட்கள் கடந்துள்ளன. எனவே இன்னும் 2 மாதங்களுக்கு மேல், கர்நாடக அரசுக்கு கால அவகாசம் உள்ளது. இருப்பினும் இவ்வாரத்திலேயே, மேல்முறையீடு செய்ய, ஆச்சாரியா மற்றும், தலைமை வக்கீல் ரவிவர்ம குமார் விரும்புகின்றனர்.

வழக்கு இழுக்கலாம்

வழக்கு இழுக்கலாம்

சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்த பிறகு, அந்த வழக்கு விசாரணை எப்போது முடியும் என்பதை கணிக்க முடியாது. ஹைகோர்ட் இவ்வழக்கை 3 மாதங்களில் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து முன்பு உத்தரவிட்டதை போல இம்முறை உத்தரவிடுவாரா என்பது கேள்விக்குறி. மேல்முறையீடு வழக்குகள் பல, நீண்ட பல ஆண்டுகளாக நிலுவையிலுள்ள வரலாறு உச்சநீதிமன்றத்துக்கு உள்ளது. இதனால், ஜெயலலிதா தரப்புக்கு உடனடியாக எந்த பாதிப்பையும், அல்லது தாக்கத்தையும் இந்த மேல்முறையீடு செய்யாது.

இடைக்கால தடை

இடைக்கால தடை

அதேநேரம், மேல்முறையீட்டின்போது, ஹைகோர்ட் தீர்ப்பிலுள்ள சில பிழைகளை சுட்டிக் காட்டி தீர்ப்புக்கு இடைக்கால தடை வாங்கினால், அப்போது ஜெயலலிதா தரப்புக்கு பாதிப்பு ஏற்படும். அரசு தரப்பில் இருந்து ஹைகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை வாங்க திட்டமுள்ளதா என்பது இதுவரை தெளிவாகவில்லை. அவ்வாறு இடைக்கால தடைக்காக கோரிக்கை விடுத்தாலோ அந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இடைக்கால தடை விதித்தாலோ அப்போது, நீதிபதி குன்ஹா கொடுத்த தீர்ப்பே அமலுக்கு வரும்

பதவி பறிபோகும்

பதவி பறிபோகும்

இதுகுறித்து அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் குழுவின் சீனியர் வக்கீல், பாலாஜி சிங்கை தொடர்பு கொண்டு கேட்டபோது "ஹைகோர்ட் தீர்ப்புக்கு ஸ்டே வாங்கப்பட்டால், கீழ்க்கோர்ட் கொடுத்த தீர்ப்பு படி ஜெயலலிதா குற்றவாளியாகவே பார்க்கப்படுவார். இதனால் அவர் முதல்வர் பதவியில் தொடர முடியாத சட்டச் சிக்கல் ஏற்படும். கணித தவறை ஆதாரமாக கொண்டு, ஹைகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க கோர அனைத்து முகாந்திரமும் உள்ளது. மேலோட்டமாக பார்த்தாலே, தவறு தெரிவதால், ஹைகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட வாய்ப்பு அதிகம் என்று கருதுகிறேன்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+