"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வளைகுடா மோதல் 5வது வாரமாகத் தொடரும் சூழலில், ஹார்முஸ் போக்குவரத்து இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஹார்முஸில் நடந்த தாக்குதல்களில் மாலுமிகளை இழந்த ஒரே நாடு இந்தியா தான் என்றும் இந்த மோதலை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வளைகுடா மோதல் ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்கிறது. இந்த மோதல் சீக்கிரமே முடிவு கொண்டு வர இதுவரை எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு பெரியளவில் பலன் கிடைக்கவில்லை. மோதல் தொடர்ந்தே வருகிறது. வளைகுடாவில் நீடிக்கும் இந்த போரால் சர்வதேச அளவிலும் பாதிப்புகள் எதிரொலிக்கிறது. பல நாடுகள் இதன் தாக்கத்தை எதிர்கொள்ள ஆரம்பித்துவிட்டது.

India on Hormuz strait issue

ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட குழப்பமே இதற்கு காரணமாகும். சர்வதேச அளவில் 20% கச்சா எண்ணெய் சப்ளை இந்த வழித்தடம் வழியாகவே நடக்கிறது. இதை தனது கண்ட்ரோலில் எடுத்துள்ள ஈரான், இதை முடக்கியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளை சேர்ந்த எந்தவொரு கப்பலுக்கும் அனுமதி இல்லை என ஈரானஅ கூறுகிறது. இதுவே குழப்பத்திற்கு காரணமாகும்.

ஆலோசனை கூட்டம்

இதற்கிடையே ஹார்முஸில் வழக்கமான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வலியுறுத்தி பிரிட்டன் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. காணொலி வாயிலாக நடந்த இந்த கூட்டத்தில் 60க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற நிலையில், இந்தியா சார்பில் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கலந்து கொண்டார். அப்போது ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க இந்தியா சார்பில் அவர் அழைப்பு விடுத்தார்.

இந்தியா

மோதல் மிகுந்த இந்த ஹார்முஸ் நீர்வழியில் தனது நாட்டு மக்களை இழந்த ஒரே நாடு நாடு இந்தியாதான் என்பதை இங்கிலாந்து ஏற்பாடு செய்த இந்த ஆலோசனை கூட்டத்தில் மிஸ்திரி சுட்டிக்காட்டினார். சர்வதேச நீர்வழிகளில் பாதுகாப்பான, தடையற்ற போக்குவரத்தின் முக்கியத்துவத்தையும் இந்தியா வலியுறுத்தியது. இப்போது நடந்து வரும் மோதலைத் தணிக்க ராஜதந்திரமே சிறந்த வழி என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

பேச்சு

மிஸ்திரி உரை தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வளைகுடா பகுதியில் வர்த்தக கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களில் மாலுமிகளை இழந்த ஒரே நாடு இந்தியா என்பதும், இந்த நெருக்கடி இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் அவர் எடுத்து கூறினார். பிராந்தியத்தின் நிலையற்றத்தன்மை, இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் நெருக்கடியிலிருந்து வெளியேறவும், பதற்றத்தைத் தணிக்கவும் ராஜதந்திரம் மட்டுமே ஒரே வழி. அனைத்து தரப்பும் இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்பது இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இந்தியர்கள் உயிரிழந்திருந்த நிலையில், அதை தான் மிஸ்திரி தனது உரையில் சுட்டிக்காட்டினர். ஹார்முஸில் இந்திய கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்ற போதிலும் வெளிநாட்டு கப்பல்களில் பணிபுரிந்த 3 இந்திய மாலுமிகள் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். இதை கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் உறுதி செய்திருந்தது.

ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உச்சத்திற்கு பறந்துள்ளது. உலகின் மிக பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, தனது பொருளாதார நலன்களைப் பாதுகாக்க இப்பகுதியில் ஸ்திரத்தன்மை அவசியம் என மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

இந்தியாவில் இப்போது வரை கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி சப்ளையில் பெரியளவில் பாதிப்பு இல்லை என்றாலும் கூட ஆங்காங்கே சில சிரமங்களை இந்தியா சந்தித்து வருகிறது. விரைவில் நிலைமை சீராகவில்லை என்றால் வேறு சில பாதிப்புகளும் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+