சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஏப்ரல் மூன்றாம் தேதிக்கான எபிசோடில் மீனா எலக்ஷனில் நிற்பதை தடுப்பதற்காக விஜயா சென்டிமெண்டாக பேசுகிறார். அதே நேரத்தில் அண்ணாமலை சொன்ன வார்த்தையை கேட்டு மீனா முக்கிய முடிவெடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், விஜயாவிடம் சிந்தாமணி மீனா எலெக்ஷனில் நிற்பதை போட்டுக் கொடுத்திருக்கிறார். அதைக் கேட்டு விஜயா அதிர்ச்சியில் இருக்கும்போது, மீனா மட்டும் ஜெயித்து தலைவி ஆகிவிட்டால் உங்களுக்கு வீட்டில் மரியாதையே போயிடும் என்று சிந்தாமணி சொன்னதும், விஜயா அதை மனதில் வைத்து கற்பனை பண்ணி பார்க்கிறார்.

மிரட்டும் மீனா

அந்தக் கனவில் மீனாவை பார்க்க ஆட்கள் எல்லாம் வீட்டுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு விஜயா தன் கையால் காஃபி போட்டு வந்து கொடுக்கிறார். அப்போது காபி கீழே கொட்டி எதுவும் அதை பார்த்து கோபமான மீனா காபியை சரியா கொண்டுட்டு வர தெரியாதா? இது கூட சொல்லிக் கொடுக்கணுமா? என்று வந்தவர்கள் முன்பு திட்டுகிறார். இதை நினைத்து பார்த்தவுடன், மீனாவை தலைவி ஆகவிடக் கூடாது என்று விஜயா முடிவு செய்து, கோபமாக வீட்டுக்கு கிளம்பிச் செல்கிறார்.

மீனாவுக்கு வாழ்த்து

அங்கு விஜயா வருவதற்கு முன்பே, மீனாவும் முத்துவும் வீட்டுக்கு வந்து, வீட்டில் உள்ளவர்களிடம் மீனா தேர்தலில் நிற்கப் போகும் விஷயத்தை சொல்லி, அவர்கள் வாங்கி வந்த ஸ்வீட்டை எல்லோருக்கும் கொடுக்கிறார்கள். இந்த விஷயத்தை கேட்டதும் ரவி எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது, நீங்க இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று வாழ்த்து சொல்லிக் கொண்டிருக்கிறார்.

விஜயா போட்ட கண்டிஷன்

அந்த நேரத்தில் விஜயா வீட்டுக்குள் வருகிறார். அத்தையை பார்த்ததும் மீனா ஸ்வீட்டை கொண்டு சென்று நீட்டுகிறார். ஆனால் அதை எடுக்காமல் விஜயா தட்டிவிடுகிறார். இதைப் பார்த்த முத்து கோபமாகிறார். அதற்கு விஜயா, நீ இந்த தேர்தலில் நிற்கக் கூடாது, ஒழுங்காக இந்த வீட்டில் மருமகளாக மட்டும் இரு. நான் சொல்வதை கேட்டு நடந்தால் தான் நீ இந்த வீட்டில் இருக்க முடியும், இல்லையென்றால் இங்கு நீ இருக்க முடியாது என்று கடுமையாக சொல்கிறார்.

அண்ணாமலை சப்போர்ட்

ஆனால் மீனாவுக்கு வீட்டில் நிறைய ஆதரவு இருக்கிறது. அதனால் விஜயா எவ்வளவு கோபமாக பேசியாலும், அது எடுபடாமல் போய்விடுகிறது. ஆனாலும் அந்த சிந்தாமணியிடம் உன்னால் ஜெயிக்க முடியாது உனக்கு என்ன தெரியும்? அவங்க எவ்வளவு பெரிய ஆட்கள் தெரியுமா அவங்க கிட்ட நீ போட்டி போடாத என்று திட்ட, அதற்கு முத்துவும் அண்ணாமலையும் சேர்ந்து விஜயாவை திட்டி மீனாவிற்கு சப்போர்ட் பண்ணுகின்றனர்.

பிறகு விஜயா தனது ரூமுக்குள் சென்று விடுகிறார். அதன் பிறகு அண்ணாமலை மீனாவிடம் பேசுகிறார். மீனா, நீ இந்த தேர்தலில் நிற்பதற்கு நான் முழு ஆதரவு தருகிறேன். என்னோட ஆசீர்வாதமும் எப்போதும் உனக்கு இருக்கும் என்று சொல்கிறார். அதேபோல் முத்துவும், அம்மா சொல்வதை கவனிக்காதே, நீ தேர்தலில் நில், நான் உன்னை ஜெயிக்க வைப்பேன் என்று மீனாவுக்கு துணை நிற்கிறான்.

முத்து செய்த செயல்

அதன்பிறகு வாக்குறுதி நோட்டீஸ் அடிப்பது பற்றி முத்துவும் மீனாவும் சேர்ந்து பேசுகிறார்கள். அதில் என்ன என்ன எழுத வேண்டும் என்று ஆலோசித்து, அதற்கான வேலைகளில் இருவரும் இறங்குகிறார்கள்.

அதே நேரத்தில் மனோஜ் ஷோரூமில் சோகமாக அமர்ந்து இருக்கிறார். அடுத்த கல்யாணம் பண்ணுவதற்கு பெண் கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கிறார். அப்போது ஜீவாவுக்கு மேட்ரிமோனியில் இருந்து போன் வருகிறது. அதை எடுத்துப் பேசிய ஜீவா, பிறகு மனோஜிடம் வந்து, உங்களுக்கு முதலில் டைவர்ஸ் ஆகட்டும், அதற்குப் பிறகுதான் பெண் பார்க்க முடியும் என்று மேட்ரிமோனியில் சொல்லிவிட்டார்கள் என்று கூறுகிறார்.

அப்போது அருகில் இருந்த மொட்டை சந்தோஷ், நம்ம மாநிலத்தில் பெண் பார்த்தால் தான் இந்த பிரச்சனை, பேசாமல் வட இந்தியாவில் இருந்து பெண் பார்த்துக்கொள்ளலாம் என்று கிண்டலாக சொல்கிறான். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+