இன்று முதல் சமையல் கேஸ் சிலிண்டர்களை முழுப் பணமும் கொடுத்து வாங்க வேண்டும்!
டெல்லி: வீடுகளுக்கு வழங்கப்படும் கேஸ் சிலிண்டர்களை இன்று முதல் முழு விலையும் செலுத்தித்தான் வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும் என்ற திட்டம் நாடு முழுவதும் அமலாகிறது.
இந்த சிலிண்டர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த மானியத் தொகை முன்கூட்டியே வாடிக்கையாளர்களின் கணக்குகளில் மத்திய அரசு செலுத்தவிருக்கிறது.

மானியம் வேண்டாம் என்று யாரெல்லாம் கூறுகிறார்களோ, அல்லது வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைச் சமர்ப்பிக்காமல் இருக்கிறார்களோ, அவர்களுக்கு இனி மானிய விலையில் கேஸ் சிலிண்டர் கிடைக்காது. முழுத் தொகையும் செலுத்த வேண்டும்.
கேஸ் சிலிண்டர்களை இதுவரை மத்திய அரசு வழங்கும் மானியம் போக எஞ்சிய தொகை கொடுத்து நுகர்வோர்கள் வாங்கி வந்தனர். மானிய தொகையை மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்தி வந்தது.
இப்போது எண்ணெய் நிறுவனங்களுக்கு இன்னும் சுதந்திரம் அளிக்கும் வகையில் சந்தை மதிப்பில் இனி கேஸ் சிலிண்டர்களை வாங்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. அதாவது கேஸின் சந்தை விலையைச் செலுத்தி வாங்கும் வழக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தும் திட்டம் இது.
இதன் முதல் கட்டமாக மத்திய அரசின் மானியம் நேரடியாக நுகர்வோரின் வங்கி கணக்கில் இன்று முதல் செலுத்தப்படும். மானியம் வேண்டாம் என்பவர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்காது.
புத்தாண்டின் முதல் நாளிலிருந்து நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.
{promotion-urls}
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications