ஹைதராபாத்தில் பிளாஸ்டிக் அரிசியில் பிரியாணி... அடிதடி ஒரே ரகளை!
பிளாஸ்டிக் அரிசியில் பிரியாணி செய்து விற்பனையில் ஈடுபட்டதாக ஹைதராபாத்தில் உள்ள கடை ஒன்றில் அடிதடி ரகளை நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் பரபரப்பு புகார் கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த அரிசி மூட்டையை அரசு அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பல பகுதிகளில் உள்ள சந்தையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள நந்தவனம் பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவர் நேற்று முன்தினம் கடையில் அரிசி வாங்கி சமைத்தார். அந்த சாதத்தை சாப்பிட்டபோது, வாயில் ஒட்டிக்கொண்டதாகவும், வித்தியாசமான சுவையில் இருந்ததாகவும் உணர்ந்த அவர் அதிர்ச்சியடைந்தார். எனவே, இது பிளாஸ்டிக் அரிசியாக இருக்கலாம் என்று கருதிய அவர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதேபோல் தனியார் விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஹைதராபாத்தில் பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக புகார் தெரிவித்ததால், அதனை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
ஆய்வு முடிவுகள் இன்று கிடைக்கும். அதன்பிறகே அவை பிளாஸ்டிக் அரிசியா இல்லையா என்பது தெரியவரும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் பிளாஸ்டிக் அரிசியில் பிரியாணி தயார் செய்ததாக கூறி, அந்தக் கடைக்காரரை பொதுமக்கள் அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காயம் அடைந்த கடைக்காரரை போலீசார் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் பிளாஸ்டிக் அரசி விற்கப்படுவதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications