தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி
நியூயார்க்: அமெரிக்காவின் 250வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் யாருமே எதிர்பார்க்காத ஒரு சர்ப்ரைஸ் மாற்றத்தை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்துள்ளார்.. நூற்றாண்டு கால மரபையே உடைத்து விட்டு, பரபரப்பை உண்டாக்கி உள்ளார் டிரம்ப்.. அமெரிக்க அதிபராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, டிரம்ப் எந்த விஷயத்தை சொன்னாலும் அல்லது செய்தாலும் அது சர்ச்சையில்தானே முடியும்? இதோ அமெரிக்காவில் இன்னொரு சட்டப்போராட்டம் வெடித்துவிட்டது.
அமெரிக்க வரலாற்றில் 2026 ஜூலை 4-ம் தேதி மிகமுக்கியமான நிகழ்வு நடைபெற உள்ளது.. இதை குறிக்கும் வகையில் தங்க நாணயம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தங்கக் காசு அமெரிக்கா
பொதுவாக, அமெரிக்காவில் பொதுவாக உயிருடன் இருக்கும் அதிபர்களின் உருவத்தை நாணயங்களில் அல்லது பணத்தாள்களில் பொறிப்பதில்லை என்ற ஒரு நீண்டகால மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.. ஆனால் அதிபர் டிரம்ப் அப்படியில்லையே... அதனால்தான் அனைத்து மரபையும் சுக்குநூறாக உடைத்து, தன்னுடைய முகத்துடன் கூடிய தங்கக் காசை, தானே அறிமுகப்படுத்தி இருக்கிறார்..
அதிபர் ட்ரம்ப் தனது கைகளை மேஜை மீது ஊன்றி, மிகுந்த தன்னம்பிக்கையுடன் நிற்பது போன்ற தோற்றம் ஒருபுறமும், அமெரிக்காவின் கம்பீரமான கழுகுச் சின்னம் மறுபுறமும் இந்த நினைவு நாணயத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.. இந்த தங்கக் காசு விரைவில் வெளியிடப்பட உள்ளது..
டிரம்ப் தங்க நாணயம்
இது வெறும் பணப் புழக்கத்திற்கான காசு கிடையாது என்றும், சேகரிப்பாளர்களுக்கான ஒரு நினைவுப் பொருள் மட்டுமே என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.. ஆனாலும் இது சட்ட ரீதியான விவாதங்களை அமெரிக்காவில் கிளப்பியுள்ளது.
அமெரிக்கக் கலை ஆணையத்தின் ஒப்புதலோடு உருவாகும் இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் சுதந்திரம் (LIBERTY) என்ற சொல்லும், 1776 முதல் 2026 வரையிலான ஆண்டுகளும் பொறிக்கப்பட்டுள்ளன.. 1926-ம் ஆண்டு அமெரிக்காவின் 150-வது சுதந்திர தினத்தின் போது அதிபர் கால்வின் கூலிட்ஜ் உருவம் பொறிக்கப்பட்டதற்கு பிறகு, நூறு ஆண்டுகள் கழித்து இப்போது ட்ரம்ப்பின் உருவம் இத்தகைய கௌரவத்தை பெறுவது அமெரிக்க அரசியலில் ஒரு புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது..
அமெரிக்காவில் சட்டப்போராட்டம்
இந்த நடவடிக்கைக்கு அந்நாட்டு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து கொண்டிருக்கிறார்கள்.. ஜனநாயக நாட்டில் தலைவர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் இத்தகைய செயல்கள், மன்னராட்சி முறையை பிரதிபலிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்..
மன்னர்களும் சர்வாதிகாரிகளும்தான் தங்களது உருவத்தை நாணயங்களில் பொறித்துக் கொள்வார்கள் என்றும், ஜனநாயக நாட்டின் தலைவர்கள் இத்தகைய நடைமுறைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்..
எனினும், கருவூல செயலருக்கு இத்தகைய நினைவு நாணயங்களை வெளியிடும் அதிகாரம் சட்டப்படி உண்டு என அரசு அதிகாரிகள் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது..
இந்தத் தங்கக் காசு மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு வரவுள்ளது.. இதன் இறுதி மதிப்பு மற்றும் எடை குறித்த விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளன.. அமெரிக்காவின் கால் நூற்றாண்டு கால சுதந்திர வரலாற்றில், ஒரு சர்ச்சைக்குரிய அதிபரின் முகம் பொறிக்கப்பட்ட இந்தத் தங்க நாணயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது..!!
-
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
தேன்கூடு ஈரான்.. பாகிஸ்தான் செய்ய போகும் பெரிய உதவி.. இஸ்லாமாபாத் வரும் அமெரிக்க 'மாப்பிள்ளை' -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி!












Click it and Unblock the Notifications