எதிர்தரப்புக்கு நேரில் வாதாட அனுமதி கொடுக்காததே ஜெ. விடுதலைக்கு காரணம்: ஆச்சாரியா தடாலடி
பெங்களூரு: எதிர்தரப்புக்கு வாதிட அனுமதி தராமலே வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுவிட்டது. இதுதான், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக முடிந்துவிட்டது என்று அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா தெரிவித்தார்.
ஜெ. வழக்கில் தீர்ப்பு வெளியான பிறகு நிருபர்களிடம் பேசினார் அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா. அவர் கூறுகையில், "நான் தீர்ப்பை முழுமையாக படித்து முடித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கருத்து கூறுகிறேன்.

ஆனால், இந்த வழக்கில், ஜெயலலிதா தரப்பு முழுக்க வாதம் செய்ய ஹைகோர்ட்டில் அனுமதிக்கப்பட்டது. ஆனால், கர்நாடக தரப்புக்கோ, ஒரு நாள் அவகாசம் மட்டுமே கிடைத்தது. அதுவும், நேரில் வாதிட அனுமதிக்கப்படவில்லை. எழுத்துப்பூர்வ வாதத்துக்கு மட்டுமே அனுமதி கிடைத்தது.
எப்போதுமே, நேரில் ஆஜராகி வாதிடுவதுதான் சிறப்பான வாதமாக இருக்க முடியும். ஏனெனில், நீதிபதி தனது சந்தேங்களை கேட்பார், அதற்கு, எதிர்தரப்பு வக்கீல் விளக்கம் சொல்ல முடியும். இந்த விஷயத்தில், எதிர்தரப்புக்கு நேரில் வாதாட அனுமதி கிடைக்கவில்லை.
ஒருநாள் அவகாசத்தை, எழுத்துப்பூர்வ வாதத்துக்கு அளித்ததற்கு பதிலாக, நேரடி வாதத்திற்கு அளித்திருந்தாலும், அது வழக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.
பவானிசிங் வாதாடியது செல்லாது என்று சுப்ரீம்கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகும், அவருக்கு மாற்றாக யாரும் நேரில் வாதாட முடியவில்லை. இதுதான் ஜெயலலிதா வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாக காரணமாகும் என்று கருதுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications