ஜனாதிபதி தேர்தல்.. பொது வேட்பாளரை களமிறக்க எதிர்க் கட்சிகள் திட்டம் !
நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் அந்த பதவிக்கு பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சிக்கு 9 கட்சிகள் ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ளது. அப்பதவிக்கான வேட்பாளர் குறித்து மத்தியில் ஆளும் பாஜக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர், அனைத்து கட்சியினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும். யாரும் ஆட்சேபம் தெரிவிக்காமலும் இருக்க வேண்டும் என்பது பாஜகவின் திட்டம். எனவே ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலை தயார் செய்யும் பணிகளை பாஜக இப்போதே தொடங்கியுள்ளது.
இருப்பினும் பாஜக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரே வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஏனேனில் 16 மாநிலங்களில் தனியாகவோ, கூட்டணியாகவோ பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளது. 5 மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் அதிகாரத்தில் உள்ளது. கேரளா, திரிபுராவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகளும், தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட இதர மாநிலங்களில் ஏனைய கட்சிகளும் உள்ளன.
இந்த நிலையில் பாஜகவுக்கு போட்டியாக பலம் வாய்ந்த பொது வேட்பாளரை நிறுத்தலாம் என்று எதிர்கட்சிகள் சிலர் கூறிவருகின்றனர். இதற்கான முயற்சிகளில் ஐக்கிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தி்த்து இந்த முயற்சிக்கு ஆதரவும் திரட்டப்பட்டுள்ளது.
பாஜக அல்லாத 13 மாநிலங்களில் இருக்கும் பலத்தை வைத்து பொது வேட்பாளரை வெற்றி பெற வைக்கும் இந்த முயற்சிக்கு இதுவரை 9 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக எதிர்க்கட்சிகள் சேர்ந்து பொது வேட்பாளரை அறிவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் கூறினார்.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications