ஒபாமாவுக்கு கிப்ட் கொடுப்பதற்காக தேசியக் கொடியில் ஆட்டோகிராப் போட்ட மோடி!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்காக நமது தேசியக் கொடியில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்டோகிராப் போட்டு அதை பிரபல சமையல்கலைஞர் விகாஸ் கன்னா மூலம் ஒபாமாவிடம் சேர்ப்பிக்க திட்டமிட்டிருந்தது சர்ச்சையாகியுள்ளது.
இந்தக் கொடியை விகாஸ் கன்னா மூலமாக ஒபாமாவிடம் சேர்க்கவிருந்த நிலையில் தற்போது அது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டு விட்டதாம்.
Hon PM signs flag to be presented to US Pres by Chef Vikas Khanna & defies Flag code #PMSorryBolo
@AamAadmiParty pic.twitter.com/FP9e7HzFkf
— Aashish Mehta (@aashishSmehta) September 25, 2015 விகாஸ் கன்னாதான், பிரதமரும், அமெரிக்காவின் முன்னணி தொழில்துறை தலைவர்களும் கலந்து கொண்ட இரவு விருந்துக்கான உணவு வகைகளை தயாரித்தவர் ஆவார்.
தற்போது தேசியக் கொடியில் ஆட்டோகிராப் போட்டது தேசியக் கொடி விதிமுறைகளுக்குப் புறம்பானது என்று சர்ச்சை வெடித்துள்ளது. இதுதொடர்பாக டிவிட்டரிலும் பலர் விமர்சித்துக் கொண்டுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியின் ஆசிஷ் மேத்தா வெளியிட்டுள்ள டிவிட்டில், கொடி விதிமுறையை மீறி தேசியக் கொடியில் பிரதமர் ஆட்டோகிராப் போட்டுள்ளார். இது தவறாகும் என்று சாடியுள்ளார்.
Ridiculous Twitter controversy over PM signing flag for @TheVikasKhanna to gift to Obama. Officials have now taken flag away to check code
— barkha dutt (@BDUTT) September 25, 2015 ஷிரியா கெக்தர் போட்டுள்ள டிவிட்டில், இது தவறு. இது நமது தேசியக் கொடி. ஏதோ நாப்கினில் கையெழுத்து போடுவது போல போட முடியாது என்று சாடியுள்ளார்.
இருப்பினும் பத்திரிகையாளர் பர்க்கா தத் இதை சர்ச்சையாக்கத் தேவையில்லை என்று கூறியுள்ளார். அவர் கூறுகையில், தேசியக் கொடியில் பிரதமர் கையெழுத்துப் போட்டதை சர்ச்சையாக்குவது தேவையற்றது. அதிகாரிகள் அந்தக் கொடியை எடுத்துச் சென்று விட்டனர் என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி, அதிபர் ஒபாமாவை திங்கள்கிழமை சந்திக்கவுள்ளார். அமெரி்க்காவுக்கு பிரமராக 2வது முறையாக வந்துள்ளார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications