80 கோடி இந்திய இளைஞர்களால் முடியாதது வேறு யாரால் முடியும்?.. கலிபோர்னியாவில் முழங்கிய மோடி
Subscribe to Oneindia Tamil
சான்ஜோஸ்: சிலிக்கேன் வேலி பயணத்தின் ஒரு கட்டமாக அங்குள்ள சாப் மையத்தில் இந்தியர்களிடையே பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்தினார்.
தற்போது பேசி வரும் பிரதமர் மோடி குட்ஈவ்னிங் கலிபோர்னியா என்று கூறி தனது பேச்சைத் தொடங்கினார்.

பிரதமரின் பேச்சிலிருந்து...
- குட் ஈவ்னிங் கலிபோர்னியா. உங்களது ஆர்வம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது
- இன்று இங்கு (அமெரிக்காவில்) செப்டம்பர் 27ம் தேதி மாலை. இந்தியாவில் செப்டம்பர் 28ம் தேதி காலை.
- இன்று இந்தியாவின் தீரப் புதல்வன் மாவீரன் பகத் சிங்கின் பிறந்த நாளாகும். அவருக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். அவர் என்றென்றும் நினைவு கூறப்படுவார்.
- கலிபோர்னியாவுக்கு 25 வருடத்திற்குப் பிறகு நான் வந்துள்ளேன். பல மாற்றங்கள். பல புதுமுகங்களைப் பார்க்கிறேன்.
- வலிமை வாய்ந்த இந்தியாவின் மாற்றத்தை கலிபோர்னியாவில் பார்க்கிறேன்.

- அமெரிக்கர்கள் இந்திய வம்சாவளியினரைப் பார்த்து பெருமை கொள்கிறார்கள். இதற்காக உங்களைப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
- 19வது நூற்றாண்டில் எனது சீக்கிய சகோதரர்கள் அமெரிக்காவுக்கு வருகை தந்தனர்
- விவசாயிகளாக வந்த அவர்கள் இந்தியாவின் விடுதலைக்காக ஏங்கிக் கொண்டிருந்தனர்
- இன்று 21வது நூற்றாண்டில் எனது மக்கள் வறுமையை ஒழிக்க போராடிக் கொண்டிருக்கின்றனர்.
- தனது இளமைக் காலத்தை சுதந்திரத்திற்காக காவு கொடுத்த ஒருவர் எனது நாட்டில் இருந்தார்
- காந்தி கூறிய கோட்பாடுகளின்படி அவர் வாழ்ந்து காட்டினார்
- 1975ல் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார்
- அவர்தான் ஜெயப்பிரகாஷ் நாராயண்.. கலிபோர்னியாவில் படிப்பதற்காக வந்தவர் ஜெயபிரகாஷ் நாராயண்
- இந்தியாவுக்கும், கலிபோர்னியாவுக்குமான உறவு தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறது
- இந்த நூற்றாண்டு ஆசியாவுக்கானது என்று எல்லோரும் ஒத்துக் கொள்வார்கள்
- ஆனால் இந்த நூற்றாண்டு இந்தியாவுக்கானது
- இது மோடியால் ஏற்பட்டதல்ல... 120 கோடி இந்தியர்களால் சாத்தியமான மாற்றம் இது - மோடி
- 16 மாதமாகி விட்டது, உங்களது சான்றிதழை எதிர்பார்க்கிறேன்.. நான் சரியாக வேலை பார்த்துள்ளேனா?
- வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும், உடலின் ஒவ்வொரு அணுவையும் நாட்டுக்காக பணியாற்ற அர்ப்பணித்துள்ளேன்
- நான் இந்தியாவுக்காக வாழ்வேன்.. இந்தியாவுக்காக மடிவேன்
- 80 கோடி இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா.. இந்த நாட்டால் முடியாதது வேறு எந்த நாட்டால் முடியும்?
- இந்தியா ஊழலால் வெதும்பிப் போய்க் கிடக்கிறது
- மகன் 50 கோடி சம்பாதித்தால் மகள் 250 கோடி சம்பாதிக்கிறார்.. மருமகனோ 1000 கோடி சம்பாதிக்கிறார்
- கலிபோர்னியாவில் வைத்து காங்கிரஸை மறைமுகமாக சாடினார் மோடி
- முன்பு உபநிஷத்துகள்தான் இந்தியாவின் அடையாளமாக இருந்தன
- இன்று அறிவியல் துறையில் இந்தியா புதிய அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது
- முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை தொட்ட முதல் நாடு இந்தியாதான்
- முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பினோம்
- நான் பிரதமராக பதவியேற்க டெல்லி வந்தபோது 50 சதவீத இந்தியர்களிடம் வங்கிக் கணக்கே இல்லை
- இன்று 18 கோடி இந்தியர்களுக்கு வங்கியில் கணக்கு திறக்கப்பட்டுள்ளது
- மின்னணு நிகர்வாகம் என்பது எளிதான நிர்வாகம்.. செலவு குறைந்த நிர்வாகமும் கூட
- காஸ் மானியத்தை விட்டுக் கொடுங்கள் என்று நான் கேஷுவலாக கூறியதை ஏற்று 30 லட்சம் இந்தியர்கள் அதை விட்டுக் கொடுத்தனர்
- அனைவருக்காகவும் நாங்கள் உருவாக்கியதுதான் "ஜாம்" (JAM)
- ஜே என்பது ஜன் தன் திட்டம்.. ஏ என்பது ஆதார் திட்டம்.. எம் என்பது மொபைல் கவர்னென்ஸ் என்பது
- உலகம் முழுவதும் இன்று தீவிரவாதம் பரவிக் கிடக்கிறது
- ஒவ்வொரு நாடும் தீவிரவாதத்திற்கு எதிராக கை கோர்த்து வருகிறது
- ஒவ்வொரு இந்தியரின் கனவும் நனவாக வேண்டும்.. 125 கோடி இந்தியர்களின் கனவும் நனவாக வேண்டும்
- கலிபோர்னியா மாகாண ஆளுநருக்கும், காங்கிரஸ் எம்.பிக்களுக்கும் என்னை இங்கு அழைத்ததற்காக நன்றி சொல்லிக் கொள்கிறேன்
- தனது பேச்சை முடிக்கும் முன்பு பாரத் மாதா கி ஜெய், ஜெய் வீர் பகத் சிங் என்று கோஷமிடுமாறு கூட்டத்தினரைக் கேட்டார் மோடி
- ஒட்டு மொத்த இந்தியர்களும் திருப்பிச் சொல்ல சாப் மையமே இந்தியர்களின் முழக்கத்தால் அதிர்ந்தது
- சாப் அரங்கில் மோடி ஆற்றிய உரை முடிவுற்றது
More From
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications