Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தி பேச்செல்லாம் சரித்தான்.. ஆனால் எல்லா இந்தியர்களுக்கும் புரியும் என ஏன் நினைக்கிறார் மோடி?

Subscribe to Oneindia Tamil

சான்ஜோஸ்: பேஸ்புக் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் சரி, இன்று சாப் மையத்தில் இந்தியர்களிடையே உரையாற்றியபோதும் சரி முழுக்க முழுக்க இந்தியிலேயே பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.

அவர் இந்திய மொழியில்தான் பேசினார். அதில் தவறே இல்லை. அழகாகவும் பேசினார், உருக்கமாகவும் பேசினார், உணர்ச்சிப்பூர்வமாகவும் பேசினார். ஆனால் ஒரு விஷயம்தான் இடித்தது.

Modi takes Hindi to US

அவரது கூட்டத்தில் ஐடி துறையைச் சேர்ந்த இந்தியர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். ஆனால் அத்தனை பேருக்கும் இந்தி தெரியும் என்று எப்படி முடிவு செய்தார் மோடி என்பதுதான் புரியவில்லை.

இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மட்டும்தான் ஐடி துறையில் பணியாற்றுகிறார்கள் என்று மோடி நினைத்து விட்டாரா?

அப்படி நினைத்திருந்தால் அது சரியாக இருக்காதே.. காரணம், ஐடி துறையில் பணியாற்றுபவர்களில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராதவர்கள்தான் பெரும்பான்மையினர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அனைவருக்கும் பொதுவான மொழியில் அவர் பேசாமல் தனக்குத் தெரிந்த இந்தியில் மட்டும் அவர் பேசியது "இந்திய" என்ற வார்த்தைத்குப் பொருத்தமானதா என்றுதான் புரியவில்லை.

பேஸ்புக் தலைமை அலுவலகத்தில் தனது தாயார் பற்றி மிக உருக்கமானக பேசினார் மோடி - முழுக்க முழுக்க இந்தியில்.

இன்று சாப் மையத்தில் நடந்த கூட்டத்திலும் தேர்தல் பிரசாரக் கூட்டம் போல முழுக்க முழுக்க இந்தியில் தனது அரசின் சாதனைகளைப் பற்றி பெரிதாக நீட்டி முழக்கிப் பேசினார் மோடி.

இந்தி புரியாத பலருக்கு எப்படி மோடி பேச்சு புரிந்திருக்கும் என்று தெரியவில்லை. மோடி இந்தியில் பேசியது தவறில்லை என்றால், இந்தியைப் புரிந்து கொள்ள முடியாமல் போனது அவர்களைப் பொறுத்தவரையில் தவறு இல்லைதான்.

"இந்திய"ப் பிரதமராக இல்லாமல், "இந்திப் பிரதமராக" படு பிடிவாதமாக மோடி பேசி வருவது முரண்பாடாகவே இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+