Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஷ்ய அதிபர் புடின் இறந்து விட்டார்; இப்போது இருப்பவர் “போலி”... "ஷாக்" கொடுக்கும் மாஜி மனைவி!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடின் இறந்து பல காலங்கள் ஆகிவிட்டதாகவும், தற்போது உள்ளவர் போலியானவர் என்றும் புடினின் முன்னாள் மனைவி அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினின் முன்னாள் மனைவி லியிட்மிலா. லியிட்மிலாவை புதின் 1983 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரை 2014ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இந்த முன்னாள் தம்பதியினருக்கு மரியா மற்றும் யேக்டரினா என 2 குழந்தைகள் உள்ளனர்.

present Vilaimir putin is fake – his ex-wife spreads in interview

கடந்த சில காலங்களாக விளாடிமர் புடினின் செயல்கள் மிக அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. விளாடிமிர் புடினை சுற்றி ஒரு மர்மம் சுழன்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிபர் புடினின் முன்னாள் மனைவி லியிட்மிலா ஜெர்மனை சேர்ந்த டீ வெல்த் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் உண்மையான புடின் இறந்து நீண்ட நாட்களாகி விட்டது. தற்போது அவருக்கு பதிலாக வேறு ஒருவர் புடின் உடலுடன் உள்ளார் என் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.

அப்பேட்டியில் அவர், "என் கணவர் துரதிருஷ்டவசமாக, நீண்ட காலத்திற்கு முன் இறந்து விட்டார். நான் அதை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவரது சார்பில் என்ன நடக்கிறது என நான் பார்க்க முடியவில்லை. இது மக்களுக்கு பயங்கரமாகத்தான் இருக்கும்.

அவர்கள் ஒன்றும் நின்றுவிடவில்லை. நான் மிகவும் பயந்தேன் அவர்கள் என்னையும் எனது மகள்களையும் கொலை செய்து விடுவதாக கூறினார்கள்.

எங்கள் குடும்பம் சரியான நிலையில் இல்லை. எனக்கு இப்போது திருமணம் ஆகி விட்டது. நான் உளவுத்துறை அதிகாரி ஒருவரை காதலித்தேன். ஆனால் நடந்தது வேறு விதமாக இருந்தது. புடின் கீழ்த்தரமானவர். கொடுமையான மனிதர். கொடுங்கோலன். அவர் என்னை எதுவும் கேட்கவில்லை. சாதாரணமாக என் எண்ணத்தை கூட அவர் அறிந்து கொள்ளவில்லை. குடும்ப அமைப்புக்கு நான் அவரது குழந்தைகளுக்கு ஒருதாயாக நான் தேவைப்பட்டேன்.

நான் நீண்ட நாட்களாக கொடுமைப்படுத்தப்பட்டேன். நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டேன். நீண்ட நாட்களாக சூரிய ஒளியையோ, வேற்று மனிதர்களையோ பார்க்க முடியவில்லை.

அதை இப்போது நினைக்கும் போதும் பயமாக இருக்கிறது. ஆனால் அவர் இறப்புக்கு பிறகு ஆரம்பித்தது. அனைத்தும் விளக்கத்தை தாண்டி உள்ளது. விவாகரத்து என் விடுதலையாக இருந்தது. நான் வெளிநாட்டில் வாழ்கிறேன். நான் நன்றாக உள்ளேன். ஆனால் ரஷ்யாவில் என்ன நடக்க போகிறது என்று எனக்கு கவலையாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+