Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பக்கத்து வீட்டுக்கு கேட்டது 'பலான' சத்தம்.. 2 குழந்தைகளின் தாய்க்கு 2 வாரம் சிறை!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: சத்தம் போட்டு செக்ஸ் வைத்துக்கொண்ட 2 குழந்தைகளின் தாய்க்கு 2 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.

இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரின் ஸ்மால் ஹீத் பகுதியிலுள்ள ஒரு அப்பார்ட்மென்டில் வசித்து வருபவர் கெம்மா வைல். 23 வயதான இந்த பெண்மணிக்கு, இரு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், இவர் மீது உள்ளூர் சிவில் நீதிமன்றத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு வித்தியாசமானது.

கெம்மா, தனது பாய் பிரெண்டோடு செக்ஸ் வைத்துக்கொள்கிறார். அப்போது, அவர் எழுப்பும் இன்ப முனகல்கள் பக்கத்து வீடுகள் வரை எதிரொலிக்கிறது. எனவே, அவருக்கு தண்டனை தர வேண்டும் என்பதுதான் அந்த மனுவின் சாராம்சம்.

கெம்மாவின் முனகல்களால், தங்கள் வீட்டு பிள்ளைகளால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும், கெம்மா, தனது வீட்டு கதவை ஓங்கி சாத்துகிறார், பாய் பிரெண்டுடன் அதிகாலை வேளைகளில் கூட சத்தம் போட்டு சண்டை போடுகிறார் என்பதும் புகாரில் இருந்தது.

ஒருநாள் அதிகாலை 5 மணிக்கு, காதலனுடன் களியாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டே, காம போதையில் உளறியது கேட்டுதான், தாங்கள், கலவரத்தோடு கண் விழிக்க நேரிட்டதாகவும் அந்த மனு விவரிக்கிறது.

இதை விசாரித்த நீதிமன்றம், கெம்மா வைலுக்கு 2 வார கால சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+