Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு பவுன் தங்கம் 2 லட்சம் ஆக உயரும்.. உலகமே அறிய வேண்டிய அமெரிக்காவின் அரசியல்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: "தங்கம் எவ்வளவோ விற்றாலும், அதை வாங்கும் கூட்டம் குறையாது" என்பது தமிழ்நாட்டுப் பழமொழி. ஆனால், இன்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் ₹1,06,000 (ஒரு லட்சத்து ஆறாயிரம்) என்ற மலைக்க வைக்கும் விலையில் விற்பனையாவதைப் பார்த்தால், அந்தப் பழமொழியை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த விலையேற்றத்திற்குப் பின்னால் 'முக்கியப் புள்ளி' ஒருவரின் கைவரிசை இருக்கிறது. அவர்தான் அமெரிக்காவின் 'அதிரடி மன்னன்' டொனால்ட் டிரம்ப். அமெரிக்கா எப்போதும் உலக நாடுகளை பதற்றமாக வைப்பது தான் தங்கம் விலை ஏற முக்கிய காரணம் ஆகும்.

டிரம்பின் 'பிசினஸ்' அரசியலும்... எகிறும் தங்கமும்!

அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் பொறுப்பேற்கத் தயாராகி வரும் நிலையில், அவரது சில "முட்டாள்தனமான" மற்றும் முரட்டுத்தனமான முடிவுகள் உலக நாடுகளை அலறவிட்டுள்ளன. ஒரு வியாபாரியைப் போல நாட்டை நடத்தும் டிரம்ப், எடுத்தவுடனேயே சில நாடுகளை வம்புக்கு இழுக்கத் தொடங்கினார்.

One sovereign of gold at 2 lakhs The price is at risk of rising due to Trump s stubborn policies

வெனிசுலாவுடன் மோதல்'

வெனிசுலாவில் தங்களுக்குச் சாதகமான ஆட்சி அமையவில்லை என்றவுடன், அமெரிக்கா அந்த நாட்டின் மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதித்தது. அவர்களின் கச்சா எண்ணெயை யாரும் வாங்கக் கூடாது என்று மிரட்டியது. அப்போது வெனிசுலாவுக்குக் கை கொடுத்தது தங்கம். ஆனால் பிரிட்டனில் சேமிக்கப்பட்ட தங்கம் வெனிசுலாவிற்கு கிடைக்கவில்லை.. காரணம் பிரிட்டன் வெனிசுலா அதிபர் மதுரோவை அதிபராக ஏற்கவில்லை.. இதனால் வெனிசுலா கடுமையான சிக்கலை சந்தித்தது.இறுதியாக வெனிசுலா அதிபரை கைது செய்து அமெரிக்காவிற்கு கொண்டு சென்றது அந்நாட்டு ராணுவம்.

கிரீன்லாந்து எனக்கு வேண்டும்

டென்மார்க்கிற்குச் சொந்தமான கிரீன்லாந்தை "விலைக்குக் கொடு" என்று அவர் கேட்பது, ஊரில் ஓடும் ஆற்றை ஒருவர் விலைக்குக் கேட்பது போல இருக்கிறது. இது ஐரோப்பிய நாடுகளிடையே அமெரிக்காவின் மீதான நம்பிக்கையைத் தகர்த்திருக்கிறது. அமெரிக்காவின் 51வது மாகாணமாக கிரீன்லாந்தை இணைக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை கண்டு அமெரிக்காவின் மிகவும் நெருங்கிய நட்பு நாடான டென்மார்க் கடும் கோபத்தில் இருக்கிறது. இத்தனைக்கும் டென்மார்க் நோட்டாவின் முக்கிய உறுப்பினராகும்.

ஈரான் & சீனாவுடன் மல்லுக்கட்டு

"நீ எனக்கே வரி போடுவியா?" என சீனா மீதும், "உன் எண்ணெயை வாங்க விடமாட்டேன்" என ஈரான் மீதும் அவர் விதிக்கும் பொருளாதாரத் தடைகள் (Sanctions), உலகப் பொருளாதாரத்தை ஒரு முட்டுச்சந்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. இதுதவிர ரஷ்யா உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. அதனை மீறி எண்ணெய் வாங்கியதால் அமெரிக்கா இந்தியாவிற்கு 50 சதவீத வரி விதித்தது. இது இந்தியாவில் தங்கம் விலை உயர காரணமாக அமைந்தது.

தங்கம் ஏன் 2 லட்சம் ஆகும்?

உலக நாடுகள் இப்போது பயப்படுவது போருக்கு அல்ல, டாலருக்கு! டிரம்ப் எப்போது யாரை மிரட்டுவார் என்று தெரியாத நிலையில், நாடுகள் தங்களின் பாதுகாப்பிற்காக டாலரைத் தூக்கி எறிந்துவிட்டு 'தங்கத்தை' பதுக்கத் தொடங்கியிருக்கின்றன. சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தங்கத்தை வாங்கி குவித்த வருகின்றன. பல நாடுகள் தற்போது தங்கத்தை வாங்கி பதுக்கி வைத்து குவிக்க தொடங்கி உள்ளன. இந்தியாவும் தங்க கையிருப்பை அதிகரித்து வருகிறது. திடீரென அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு ஒரு நாடு ஆளானால், அந்த நாட்டின் பணத்தின் மதிப்பு கடுமையாக சரிந்து விடும். மூட்டை மூட்டையாக பணம் இருந்தாலும் ப்ரோஜனம் இல்லாமல் போகும். ஏற்கனவே இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் நாணய மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. அமெரிக்க டாலரும் வரி பதற்றங்களால் சரிந்து வருகிறது,

தங்கத்தில் வணிகம் நடந்தால்

இப்போது உள்ள சூழலில்,சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தங்களின் வர்த்தகத்தைத் தங்கத்திலேயே செய்ய முடிவெடுத்தால், டிமாண்ட் அதிகரித்து தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறும். அமெரிக்காவில் டிரம்ப் கொண்டு வரப்போகும் வரிக்குறைப்புகள் அந்நாட்டின் கடனை உயர்த்தும். கடன் அதிகமானால், அவர்கள் மூட்டை மூட்டையாக அச்சடித்து வைத்துள்ள காகிதப் பணத்திற்கு மதிப்பு குறையும், அப்போது மீண்டும் 'தங்கம்' தான் ராஜாவாக மாறும்.

டிரம்ப்பின் கொள்கையால் ஏறும்

இன்று அமெரிக்காவின் பிடிவாத கொள்கையால் தான் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டியிருக்கிறது தங்கம், டிரம்பின் இந்த "நானே ராஜா, நானே மந்திரி" கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த ஓராண்டு அல்லது 2028க்குள் ஒரு சவரன் 2 லட்சம் ரூபாய் ஆவதை எவராலும் தடுக்க முடியாது போலத் தெரிகிறது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

தங்கம் மியூசியத்தில் தான் இருக்கும்

எனவே நடுத்தர வர்க்கத்தினர் இனி திருமணத்திற்காகத் தங்கம் வாங்குவதை விட, மணமகன் அல்லது மணமகளுக்குப் பதிலாக ஒரு கிலோ தங்கம் வைத்திருப்பவரைத் தேடுவது சுலபமாக இருக்கும் போலிருக்கிறது. டிரம்ப் இதே வேகத்தில் போனால், தங்கம் கடைகளில் இருக்காது... அருங்காட்சியகத்தில் மட்டுமே இருக்கும் என்கிறார்கள் சில வெளிநாட்டு ஆய்வாளர்கள்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+