அமெரிக்கா, இஸ்ரேல், சீனா, ரஷ்யா.. ரகசிய கூட்டு? டீலிங் போட்டு குட்டி நாடுகளை தீர்க்க திட்டம்? பகீர்
நியூயார்க்: வெனிசுலா நாட்டை அமெரிக்கா கைப்பற்றியது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த அதிர்வலைகள் பெரிய அளவில் அமெரிக்காவை பாதிக்காது. தொடர்ந்து வெனிசுலாவில் உள்ள வளங்களை திருடும் வரை அமெரிக்கா அங்கேயேதான் கூடாரம் போட்டு இருக்கும்.
வெனிசுலாவிற்கு நடந்தது தைவானுக்கும், உக்ரைனுக்கும் கூட நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதை தடுக்க தவறிய உலக நாடுகள் வெனிசுலா விவகாரத்திலும் எதுவும் செய்ய முடியாது. கடந்த சில வாருடங்களாகவே சொல்லி வைத்தார் போல.. வலிமையான நாடுகள் தங்களின் பலவீனமான அண்டை நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.. இதை வேடிக்கை பார்த்தபடி மற்ற உலகின் முக்கிய வல்லரசுகள் மௌனம் காக்கின்றன.

இந்த ஆக்கிரமிப்புகளை பார்க்க.. தனித்தனியாகத் தோன்றினாலும், அவை அனைத்தும் சேர்ந்து ஒரு கேள்வியைத்தான் எழுப்புகின்றன: உலக பெரிய சக்திகள் ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்தின் கீழ், இப்படி நாடுகளை ஆக்கிரமிக்கின்றனவா.. நான் ஆக்கிரமிக்கிறேன்.. நீ கண்டுக்காத.. நீ செய்யும் போது நான் கண்டுக்க மாட்டேன் என்று சொல்லி வைத்து செயல்படுவது போல தோன்றுகிறது!
வெனிசுலா அமெரிக்கா மோதல்
அமெரிக்கா வெனிசுவேலா மீது தடைகள், அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்கள் மூலம் மறைமுகக் கட்டுப்பாட்டைச் செலுத்துகிறது. அதோடு நேரடியாக வெனிசுலாவை கையகப்படுத்தி உள்ளது. வெனிசுலா நாட்டை நாங்களே ஆளப்போகிறோம்.. இனி அங்கே உள்ள எண்ணெயை வர்த்தகம் செய்யும் வரை, அதை பயன்படுத்தும் வரை சில முதல் பல காலங்களுக்கு நாங்கள் வெனிசுலா நாட்டை ஆளப்போகிறோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுராவை கைது செய்த நிலையில் டிரம்ப் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சாம்ராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்கா தன்வசம் கொண்டு வந்துள்ளது.
உலகில் அதிக கச்சா எண்ணெய்.. அதிக தங்கம் கொண்ட நாடு எது என்று கேட்டால் அதற்கு சவுதி உள்ளிட்ட அரபு நாடுகள் என்றெல்லாம் நீங்கள் நினைத்தால் அது தவறு. உலகில் அதிக கச்சா எண்ணெய் உள்ள நாடு வெனிசுலா. ஆனால் அதன் எண்ணெய் உற்பத்தி உலகின் 0.35 சதவிகித எண்ணெயை வர்த்தகத்தை விட குறைவு. இந்த வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை கையில் எடுக்கும் நாடு.. சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை ஆட்டிப்படைக்கலாம். முறையாக கச்சா எண்ணெயை பிரித்து விற்பனை செய்தால்.. வெனிசுலாவின் வளம்தான் உலகையே ஆட்டிப்படைக்கும். வெனிசுலாவை அமெரிக்கா கைப்பற்றிய இந்த விவகாரத்தில் பிற வல்லரசுகள் பெரும்பாலும் மௌனம் சாதிக்கின்றன.
ரஷ்யா உக்ரைன் மோதல்
அதே சமயம், ரஷ்யா உக்ரைனுக்குள் பலவந்தமாக நுழைந்து, உக்ரைனிய நகரங்களை அழித்ததுடன், மில்லியன் கணக்கான மக்களை இடம்பெயரச் செய்தது. மேற்கத்திய நாடுகளின் கண்டனங்களைத் தாண்டி, ரஷ்யா துணிச்சலாக உக்ரனை தாக்கி வருகிறது.
இதற்கிடையில், சீனா தைவான் மீது பலவழிகளில் அழுத்தம் கொடுக்கிறது, தைவான் தன்னுடைய பிரதேசம் என அது வலியுறுத்துகிறது. பல நாடுகள் கவலை தெரிவித்தாலும், சீனா மீதா பொருளாதாரச் சார்பு மற்றும் மோதல் அச்சத்தால், சீனாவை நேரடியாக எதிர்க்க தயங்குகின்றன.
மத்திய கிழக்கில், இஸ்ரேல் காசாவில் மோசமான ராணுவ நடவடிக்கைகளை மேகொண்டு வருகிறது. காசாவின் பெரும்பாலான பகுதிகள் அழிக்கப்பட்டு, பொதுமக்கள் உயிரிழந்தனர்; மனிதாபிமான அமைப்புகள் அங்கே ஏற்படும் பேரழிவு குறித்து எச்சரிக்கின்றன. அமெரிக்கா இதற்கு அரசியல் மற்றும் ராணுவ ரீதியாக ஆதரவு வழங்குகிறது.
இந்த விவகாரங்களில் யார் மௌனம் காக்கிறார்கள் என்பதே வியப்பு. வெனிசுவேலா விஷயத்தில் அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா, சீனா மௌனம் காக்கின்றன. உக்ரைன் ஆக்கிரமிப்புக்கு சீனா கண்டனத்தைத் தவிர்த்து வேறு எதுவும் செய்யவில்லை. தைவான் விவகாரத்தில் சீனாவுக்கு ரஷ்யா ஆதரவளிக்கிறது. காசாவில் இஸ்ரேல் செயல்பட, பல வல்லரசுகள் ஆதரித்தன அல்லது தலையிடவில்லை. ரஷ்யா, சீனா தலையிடவில்லை.
இந்த மௌனம், உலகின் பெரிய நாடுகள் ஒரு மறைமுகப் டீலிங்கை எட்டியுள்ளதை உணர்த்துகிறது. "உங்கள் பகுதியில் நீங்கள் செயல்படுங்கள், நான் என்னுடையதில் செயல்படுவேன்" என்ற எழுதப்படாத ஒப்பந்தத்தின்படி, செயல்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தப்போக்கு தொடர்ந்தால், சக்திவாய்ந்த நாடுகள் அண்டைப்பகுதிகளைச் சற்று சிறிதாக உள்வாங்கி அல்லது கட்டுப்படுத்தி தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்தலாம். சிறிய நாடுகளுக்கு இது ஒரு அபாயகரமான எதிர்காலம். சிறிய நாடுகள் அழிந்து.. உலகமே ஒரு சில நாடுகளின் கூட்டமைப்பாக மாறும் சூழல் ஏற்படலாம். சிறிய நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து.. அவை எல்லாம் பெரிய நாடுகளின் அங்கமாகும் சூழல் உள்ளது.
-
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
நிலவில் மீண்டும் கால் வைக்கும் மனிதர்கள்.. 53 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சரித்திரம் படைக்கும் அமெரிக்கா -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications