டிரம்ப் போடும் ஆட்டம்.. ஈரானை நோக்கி அணுசக்தி போர்க்கப்பலை அனுப்பிய அமெரிக்கா.. நிலைமை கைமீறுது
நியூயார்க்: அமெரிக்கக் கடற்படையின் 'யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்' என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல், மத்திய கிழக்கு நோக்கிப் புறப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படும் நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவு கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே நிலையில் கடும் பதட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கில் புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.

அணுசக்தி மூலம் இயங்கும் போர்க்கப்பல்
அணுசக்தி மூலம் இயங்கும் இந்த சூப்பர் கேரியர், அண்மையில் தென் சீனக் கடலில் வழக்கமான பயிற்சிகளின் ஒரு பகுதியாக நேரடித் துப்பாக்கிச் சூடு மற்றும் எரிபொருள் நிரப்பும் பயிற்சிகளை மேற்கொண்டது. இந்தோ-பசிபிக் பகுதியிலிருந்து மத்திய கிழக்குக்குச் செல்ல இதற்கு ஒரு வாரம் ஆகும்.
யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில், எஃப்/ஏ-18இ/எஃப் சூப்பர் ஹார்னெட்கள், இ/ஏ-18ஜி க்ரோலர்ஸ், இ-2டி அட்வான்ஸ்டு ஹாக்ஐஸ் மற்றும் எம்.எச்-60ஆர்/எஸ் சீஹாக்ஸ் போன்ற அதிநவீன விமானங்கள் கொண்ட ஏர் விங் 9 பிரிவு உள்ளது. அர்லே பர்க் வகையைச் சேர்ந்த யூ.எஸ்.எஸ். ஸ்ப்ரூயன்ஸ் மற்றும் யூ.எஸ்.எஸ். மைக்கேல் மர்ஃபி ஆகிய வழிகாட்டப்பட்ட ஏவுகணைத் தகர்ப்புக் கப்பல்களும் இக்குழுவில் அடங்கும்.
இக்குழுவில், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் யூ.எஸ்.எஸ். ஃபிராங்க் இ. பீட்டர்சன் ஜூனியர் இடம்பெறுகிறது. மேலும், யூ.எஸ்.எஸ். ரூஸ்வெல்ட் என்ற அர்லே பர்க் ஏவுகணை தகர்ப்பு கப்பல் பெர்சியன் வளைகுடாவில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
ஈரான் - அமெரிக்கா
அக்டோபர் 2023இல் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்கள் வெடித்த பின்னர், அமெரிக்க கடற்படை மத்திய கிழக்கில் ஒரு விமானம் தாங்கி கப்பலை கடந்த செப்டம்பர் வரை நிலைநிறுத்தியிருந்தது. யுஎஸ்எஸ் நிமிட்ஸ் வெளியேறியபோது, பென்டகன் வெனிசுலாவின் நிக்கோலஸ் மாதுரோவின் ஆட்சியை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியது.
ஈரானுக்கு எதிராக அதிபர் டிரம்ப்பிற்கு முன்னர் இல்லாத வகையில், விரிவான ராணுவத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆப்ஷன்களை பென்டகன் அவருக்கு வழங்கியுள்ளது. இந்தத் ஆப்ஷன்களில் ஈரானின் அணு மற்றும் ஏவுகணை தளங்கள் மீதான தாக்குதல்களும் அடங்கும்.
ஈரானில் நிலவும் அமைதியின்மைக்கு மத்தியில், ராஜதந்திரம் அல்லது ராணுவ பலத்தைப் பயன்படுத்துவது என்ற முக்கிய தேர்வு டிரம்ப்பிற்கு உள்ளது. ஈரானின் அணு அமைப்புகளை ஏற்கனவே தாக்கிவிட்டதாக அமெரிக்கா கூறிய நிலையில் தற்போது மீண்டும் ஈரானின் அணு ஆயுத அமைப்புகளை அமெரிக்கா தாக்கும் என்று திட்டமிடப்பட்டு உள்ளது.
ஈரானின் அணு ஆயுத அமைப்பு மீது தாக்குதல்
நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இஸ்லாமியக் குடியரசு ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை ஈரான் அரசு ஒடுக்கி வரும் நிலையில், அந்நாட்டை இலக்கு வைக்க பென்டகன் பல ஆப்ஷன்களை ஆய்வு செய்து வருகிறது. இதில், முந்தைய அமெரிக்கத் தாக்குதலைப் போலவே, ஈரானிய அணுசக்தி வசதிகள் மீது மீண்டும் ஒரு தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளும், இணையவழித் தாக்குதல்கள் போன்ற குறிப்பிட்ட நடவடிக்கைகளும் அடங்கும். ஜனாதிபதி டிரம்ப் செவ்வாய்க்கிழமை இது குறித்த முறையான இராணுவ விளக்கத்தைப் பெற திட்டமிட்டிருக்கிறார்.
இந்த ஆப்ஷன்களில், ஈரானின் அணுசக்தி திட்ட தளங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை தளங்கள் போன்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகள் அடங்கும். ஃபோர்டோ, நடன்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய அணுசக்தி வசதிகளை இலக்காகக் கொண்ட ஜூன் 22 அன்று நடந்த B2 குண்டுவீச்சு விமானங்களின் தாக்குதலை விட இவை மிகவும் விரிவானதாக இருக்கலாம்.
மாற்ற ஆப்ஷன்களில், இணையவழித் தாக்குதல்கள் அல்லது வரையறுக்கப்பட்ட ராணுவத் தாக்குதல்கள் ஆகியவை அடங்கும் என ஒரு அதிகாரி விவரித்தார். இத்தாக்குதல்கள், இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) தலைமையிலான ஈரானின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பை, குறிப்பாக போராட்டங்களை அடக்குவதில் ஈடுபட்டுள்ள பசிஜ் மிலிஷியா படைகளை குறிவைக்கும். பரந்த இராணுவ மோதலைத் தூண்டாமல், ஒரு தடுப்புச் செய்தியை அனுப்புவதே இதன் நோக்கம்.
பசிஜ் மிலிஷியா படைகளை குறிவைக்கும் தாக்குதல்கள்
ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் வான்வெளி தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவி வருகிறது. இதனால் அங்கு உள்ள அமெரிக்க மக்களை வெளியேறும்படி அமெரிக்கா உத்தரவிட்டு உள்ளது.
ஈரானில் நிலவும் அமைதியின்மையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், சாத்தியமான தாக்குதல் ஆப்ஷன்கள் குறித்து ஆலோசிப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக, 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்று வரும் மிகப் பெரிய நாடளாவிய போராட்டங்களின் மூன்றாவது வாரத்தை எட்டி உள்ளது. தொடர் போராட்டங்களை ஈரான் எதிர்கொண்டு வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு வெளியாகி உள்ளது.
"நாங்கள் ஈரான் விவகாரத்தை மிகவும் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ராணுவம் அதைப் பரிசீலித்து வருகிறது, மேலும் சில வலுவான விருப்பங்களை நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் விரைவில் ஒரு முடிவுக்கு வருவோம்," என்று டிரம்ப், தனது மார்-எ-லாகோ இல்லத்திலிருந்து வாஷிங்டன் திரும்பியபோது செய்தியாளர்களிடம் கூறினார்.
-
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
ரூபாய் மதிப்பு 100-ஐ தாண்டுமா? ஆர்பிஐ களத்தில் இறங்கியும் பலன் கிடைக்காத நிலை!












Click it and Unblock the Notifications